இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2019 ஓகத்து

2019 ஓகத்தில் தயாரிப்பு நடவடிக்கைகள் மேலும் உயர்ந்த வீதத்தில் விரிவடைந்து 56.6 கொண்ட பெறுமதிச் சுட்டெண் ஒன்றினைப் பதிவுசெய்தன. இது, 2019 யூலையுடன் ஒப்பிடுகையில் 0.9 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். தயாரிப்பு கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணில் ஏற்பட்ட இவ்விரிவிற்கு புதிய கட்டளைகளில் விசேடமாக எதிர்வருகின்ற பண்டிகைக் கால கேள்வியினை நிறைவுசெய்வதற்காக உணவு மற்றும் குடிபானங்கள் அத்துடன் ஆடைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையின் தயாரிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். அதேவேளை, ஓகத்து மாதகாலப்பகுதியின் போது தொழில்நிலையானது விசேடமாக உணவு மற்றும் குடிபானத் துறையில் மெதுவான வீதத்தில் மேலும் அதிகரித்தது. அதேவேளை, புடவை மற்றும் ஆடை தொழில்துறையிலுள்ள பல பதிலிறுப்பாளர்கள் சந்தையில் தொழிலாளர் கிடைக்கப்பெறும் தன்மை குறைவாகவிருந்தது என சுட்டிக்காட்டினர்.
அதேவேளை, ஓகத்தில் கொள்வனவுகளின் இருப்பு குறைவான வேகத்தில் விரிவடைந்தது. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி என்பன உயர்வான வீதத்தில் விரிவடைந்த போதிலும், முன்னைய மாதத்திலிருந்து முன்கொண்டு செல்லப்பட்ட திரண்ட கையிருப்புகளின் காரணமாக கொள்வனவுகளின் கையிருப்பு குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருக்கவில்லை. மேலும், நிரம்பலர்கள் விநியோக நேரம், விசேடமாக உள்நாட்டு நிரம்பலர்களிடமிருந்து சிறிதளவு உயர்வான வீதத்தில் நீட்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, September 17, 2019