கூட்டு ஆதன சந்தை ஆய்வு
உண்மைச் சொத்து தொழிற்துறைக்கும் அதன்மூலம் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்குமாக இத்துறையின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, சந்தை தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன், இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம் 2017ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் கூட்டுஆதன தொடர் மாடிகளின் சந்தை அளவீட்டை தொடங்கி வைத்தது. அளவீடு காலாண்டு அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றதுடன் பதிலிறுப்பாளர்கள் ஸ்ரீலங்கா கண்டோமினியம் டெவலப்பர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும் ஏனைய முக்கிய சந்தை செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கியிருந்தனர். அளவீட்டினூடாக சேகரிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தி கூட்டுஆதன தொடர் மாடிகளுக்கான புதிய விலைச் சுட்டெண் தொகுக்கப்படுகிறது.
ஆதன இணையத்தளங்களில் பதிவிடப்பட்ட பகிரங்கமாகக் கிடைக்கக்கூடிய தரவுகளினூடாக வதிவிட ஆதன விற்பனைகளின் கோரும் விலைகளையும் புள்ளிவிபரத் திணைக்களம் சேகரிக்கின்றது. இத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு, கூட்டு ஆதன தொடர்மாடிகள், இல்லங்கள் மற்றும் காணிகள் ஆகியவற்றுக்காக உண்மைச் சொத்து கோரும் விலைச் சுட்டெண்கள் தொகுக்கப்படுகின்றன.
தொகுக்கப்பட்ட உண்மைச் சொத்து ஆதன சுட்டெண்களுடன் கூட்டு ஆதன தொடர்மாடிகள் சந்தை அளவீட்டின் காலாண்டு தொகுப்பானது 2022 முதற் காலாண்டின் அறிக்கைகளில் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாகவிருக்கும்.
03.04.2023 உண்மைச் சொத்து ஆதன சந்தை பகுப்பாய்வு – 4ஆம் காலாண்டு 2022
31.12.2022 உண்மைச் சொத்து ஆதன சந்தை பகுப்பாய்வு – 3ஆம் காலாண்டு 2022
30.09.2022 உண்மைச் சொத்து ஆதன சந்தை பகுப்பாய்வு – 2ஆம் காலாண்டு 2022
06.07.2022 உண்மைச் சொத்து ஆதன சந்தை பகுப்பாய்வு – 1ஆம் காலாண்டு 2022
18.03.2022 கூட்டு ஆதன சந்தை ஆய்வு - 4 ஆம் காலாண்டு 2021
28.12.2021 கூட்டு ஆதன சந்தை ஆய்வு - 3 ஆம் காலாண்டு 2021
04.10.2021 கூட்டு ஆதன சந்தை ஆய்வு - 2 ஆம் காலாண்டு 2021
25.06.2021 கூட்டு ஆதன சந்தை ஆய்வு - 1 ஆம் காலாண்டு 2021
26.03.2021 கூட்டு ஆதன சந்தை ஆய்வு - 4 ஆம் காலாண்டு 2020
11.01.2021 கூட்டு ஆதன சந்தை ஆய்வு - 3 ஆம் காலாண்டு 2020