நிதியியல் முறைமை மேற்பார்வைச் சபை

நிதியியல் முறைமை மேற்பார்வைச் சபையானது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிதியியல் நிறுவனங்களின் நிலைபெறத்தக்கதன்மை மற்றும் உறுதிப்பாடு என்பவற்றை மையப்படுத்தி, பேரண்டமுன்மதியுடைய மற்றும் நுண்பாகமுன்மதியுடைய வழிமுறைகளை வினைத்திறன்மிக்க வகையில் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதனூடாக நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை பாதுகாக்கப் பங்களிக்கும் குறிக்கோளுடன் தாபிக்கப்பட்டது.

நிதியியல் முறைமை மேற்பார்வைச் சபையின் பிரதான பணிகள்:

  1. நிதியியல் முறைமை மேற்பார்வைச் சபையானது முறைமைசார்ந்த இடர்நேர்வுகளின் அடையாளங்காணப்பட்ட கட்டியெழுப்புகையை தணிப்பதற்கு பேரண்டப்பொருளாதார கொள்கைகளை கலந்துரையாடி விதந்துரைக்கும் என்பதுடன் நிதியியல் துறை ஒழுங்குவிதிகளின் ஊடாக ஒப்புதலளிக்கப்பட்ட பேரண்டப்பொருளாதார கொள்கைகளின் நடைமுறைப்படுத்தலை ஒருங்கிணைக்கும்.
  2. சபையானது தமது கண்ணோட்டத்தின் கீழே காணப்படும் நிதியியல் முறைமை பிரிவுகளின் விiனைத்திறனையும், ஆற்றல்வாய்ந்ததன்மையையும் அத்துடன் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கு நிதியியல் துறை அதிகாரசபைகளுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கும்

நிதியியல் முறைமை மேற்பார்வைச் சபையின் உள்ளமைப்பு பின்வருமாறு

தலைவர்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்

Members

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் துறை ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை என்பவற்றிற்குப் பொறுப்பாகவுள்ள துணை ஆளுநர்
இலங்கை மத்திய வங்கியின் பேரண்டமுன்மதியுடைய கொள்கைக்குப் பொறுப்பாகவுள்ள துணை ஆளுநர்
திறைசேரிக்கான செயலாளரால் தெரிவுசெய்யப்பட்ட துணைச் செயலாளர்
இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் முதன்மை நிறைவேற்று அலுவலர்/ தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம்
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முதன்மை நிறைவேற்று அலுவலர்/தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம்
இலங்கை கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம்
பதிவுசெய்யப்பட்ட கம்பனிகள்
கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர்

நிதியியல் முறைமை மேற்பார்வைச் சபையின் செயலாளர்

பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம்

நிதியியல் முறைமை மேற்பார்வைச் சபையானது ஆகக் குறைந்தது காலாண்டு ரீதியில் ஒன்றுகூடப்படும். தலைவர் மூலம் ஏதேனும் விசேட கூட்டம்  ஒன்றுகூட்டப்படலாம்.