Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தினை உருவாக்குதல்

மூலதனப் பாய்ச்சல்களை மேலும் தளர்த்தல் மற்றும் நடைமுறைக் கணக்கு கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பல்வேறு வகையான வெளிநாட்டு நாணய/ ரூபாக் கணக்குகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை இலகுவாக்கும் நோக்குடன் புதிய வெளிநாட்டுச் செலாவணிச் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்கம் அதன் 2016ஆம் ஆண்டிறக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் அறிவித்திருந்தது. 

இவ்வறிவித்தலினை தொடர்ந்து, வெளிநாட்டு செலாவணி தொழிற்பாடுகளுக்கான புதிய சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்பொன்றானது 2017 நவெம்பர் 20ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 1953ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினை பிரதியிடுகின்ற 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய சட்டத்தின் ஏற்பாடுகளானது இலங்கை மத்திய வங்கியில் புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும். 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - செத்தெம்பர் 2017

2017 செத்தெம்பரில் ஏற்றுமதித் துறைச் செயலாற்றமானது ஏற்றமதிகளில் ஏற்பட்ட இரட்டை இலக்க வளர்ச்சியினால் தூண்டப்பட்டு தொடர்ந்து மூன்றாவது மாதமாக மாதாந்த ஏற்றுமதிகளை ஐ.அ.டொலர் 1 பில்லியன் அளவினை விஞ்சிக் காணப்பட்டன. எனினும், இம்மாத காலப்பகுதியில் எரிபொருள் மற்றும் அரிசி என்பனவற்றின் உயர்ந்த இறக்குமதிகள் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2016 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் முக்கிய சேரிடங்களிலிருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் ஓரளவு குறைந்த எண்ணிக்கை காரணமாக சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் இம்மாத காலப்பகுதியில் மிதமாக வீழ்ச்சியடைந்தன. 2017இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியின் விளைவாக செத்தெம்பரிலும் தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ந்தும் மிதமானதாகக் காணப்பட்டது. எனினும், தொடர்ச்சியான முதலீட்டாளர் நம்பிக்கையினைப் பிரதிபலிக்கின்ற விதத்தல், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கானது கொழும்புப் பங்குச் சந்தை மற்றும் அரச பிணையங்கள் சந்தை என்பனவற்றிற்கான உயர்ந்த வெளிநாட்டு உட்பாய்ச்சல்களின் காரணமாக இம்மாத காலப்பகுதியில் தொடர்ந்தும் பலம் பெற்றது.

2017 ஒத்தோபாில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 செத்தெம்பரில் 8.6 சதவீதத்திலிருந்து 2017 ஒத்தோபரில் 8.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 செத்தெம்பரில் 6.8 சதவீதத்திலிருந்து 2017 ஒத்தோபரில் 7.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 ஒத்தோபா்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஒத்தோபர் மாதத்தில் 54.8 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 செத்தெம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 4.2 புள்ளிகளாலான ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 செத்தெம்பர் உடன் ஒப்பிடும் போது 2017 ஒத்தோபரில் ஒரு குறைந்த வேகத்திலான அதிகரிப்பினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட அதிகரித்திருந்த மட்டங்களிலிருந்து மெதுவடைந்த புதிய கட்டளைகள் மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களினால் உந்தப்பட்டது. உற்பத்தி மற்றும் கொள்வனவுகள் இருப்பு துணைச்சுட்டெண்களும் ஒத்தோபர் மாதத்தில் ஒரு குறைந்த வீதத்தில் விரிவடைந்திருந்தது. அதே வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் ஒரு உயர் வீதத்தில் நீட்சியடைந்ததுடன், இதற்கு வெளிநாட்டு வழங்குனர்களில் வேறு நாடுகளிலிருந்தான வழங்கல் கேள்விகளின் அதிகரிப்பு காரணமாக அவர்களுடைய வழங்கல் நேரம் நீட்சியடைந்தமையே காரணமாக அமைந்தது.

காணி விலைச் சுட்டெண் - 2017இன் முதலரையாண்டு

உண்மைச் சொத்துத் துறையின் அபிவிருத்திகளை கண்காணிக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியானது பல குறிகாட்டிகளை தொகுத்து பகுப்பாய்வு செய்கின்றது. 1998 முதல் கொழும்பு மாவட்டத்தினை உள்ளடக்கி தொகுக்கப்படுகின்ற அரையாண்டு காணி விலைச் சுட்டெண் இத்தன்மையிலான குறிகாட்டிகளிலொன்றாகும். காணி விலைச் சுட்டெண் தொகுக்கும் செயன்முறையில், இலங்கை மத்திய வங்கியானது கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளின் 1 சுமார் 50 நிலையங்களை உள்ளடக்கி இலங்கை விலை மதிப்புத் திணைக்களத்தினால் சேகரிக்கப்படும் காணி விலைத் தரவுகளைப் பயன்படுத்துகின்றது. காணிப் பல்வகைப் பயன்பாட்டுத்தன்மை நோக்கிலும் ஒரேசீர்மை அமைப்பினைப் பேணுவதற்கும் வதிவிட, வர்த்தக ரீதியான மற்றும் கைத்தொழில் காணிகளுக்காக மூன்று சுட்டெண்கள் வெவ்வேறாகக் கணிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று துணைச் சுட்டெண்களினதும் சராசரியினைக் கருத்திற்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த காணி விலைச் சுட்டெண் கணிக்கப்படுகின்றது.

முழுவடிவம்

Monetary Policy Review - No. 7 of 2017

Considering developments in the domestic and international macroeconomic environment, the Monetary Board, at its meeting held on 06 November 2017, was of the view that the current monetary policy stance is appropriate. Accordingly, the policy interest rates of the Central Bank of Sri Lanka will remain unchanged at their current levels.

The decision of the Monetary Board is consistent with the objective of maintaining inflation at midsingle digit levels over the medium term and thereby facilitating a sustainable growth trajectory. The rationale underpinning the monetary policy stance is set out below.

Pages