வௌிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 யூன்

வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சுருக்கத்தின் காரணமாக 2019 யூனில் வெளிநாட்டுத் துறை மேலும் வலுவடைந்த வேளையில் நாட்டிற்கான இரு பன்னாட்டு முறிகளின் வழங்கலிலிருந்தான பெறுகைகளின் காரணமாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் பெருமளவிற்கு அதிகரித்தன.   

2019 யூனில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஐ.அ.டொலர் 316 மில்லியன்களுக்கு குறுக்கமடைந்தது. இது, 2010 ஒத்தோபருக்குப் பின்னர் ஏற்பட்ட மிகக்குறைந்ததொரு அளவாகும்.

இக்குறிப்பிடத்தக்க குறைப்பிற்கு இறக்குமதிச் செலவினம் 23.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையும் ஏற்றுமதி வருவாய்கள் 5.8 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தமையுமே காரணமாகும். 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் தாக்கத்திலிருந்து படிப்படியாக மீட்சியடைந்து சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் யூனில் உயர்வடைந்தன. சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 2019 மேயுடன் ஒப்பிகையில் 2019 யூனில் 66.8 சதவீதத்தினால் அதிகரித்தன. எனினும், சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 2019 யூனில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 57.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன.  

2019 யூனில் தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 537 மில்லியன்களாக விளங்கி 2.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் (ஆண்டிற்கு ஆண்டு) பதிவுசெய்தன. ஒன்றுசேர்ந்த அடிப்படையில் தொழிலாளர் பணவனுப்பல்கள் 2019 முதலரைப்பகுதியில் 3,270 மில்லியன்களாக விளங்கின. 

முழுவடிவம்

Published Date: 

Tuesday, August 20, 2019