கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), முன்னைய மாதத்தில் அடையப்பெற்ற குறிப்பிடத்தக்க உயர்வான மட்டத்தினைவிட 2024 ஓகத்தில் மெதுவான வேகத்தில் விரிவடைந்து, 51.4 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்தது. மேலும், அநேகமான ஏனைய சுட்டெண்களும் நடுநிலையான அடிப்படை அளவுமட்டத்தை அண்மித்து காணப்பட்டு, கட்டடவாக்கத் தொழிற்துறையின் தொழிற்பாடுகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பரந்தளவில் மாற்றமின்றிக் காணப்பட்டதை எடுத்துக்காட்டின.