பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான நான்காவது மீளாய்வினை நிறைவுசெய்கின்றது

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கையுடனான 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான நான்காவது மீளாய்வினை நிறைவுசெய்து, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் என்பவற்றிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிஎஉ 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 350 மில்லியன்) தொகைக்கான உடனடி அணுகலினை நாட்டிற்கு வழங்குகின்றது. இது பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கை பெற்றுக்கொள்கின்ற ஐந்தாவது தொகுதியாக காணப்படுவதுடன், இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பன்னாட்டு நாணய நிதிய நிதியியல் ஆதரவினை சிஎஉ 1.27 பில்லியனிற்கு (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.74 பில்லியன்) அதிகரிக்கின்றது. பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2025 யூலை 03 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

முழுவடிவம்

Published Date: 

Thursday, July 3, 2025