நிதியியல் அறிவினைக் கொண்ட இலங்கை” என்ற பரந்தளவிலான தொலைநோக்கை கட்டியெழுப்புவதுடன் அணிசேர்ந்து, நிதியியல் அறிவு பற்றிய வழிகாட்டலின் கீழ் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முன்முயற்சிகளை அங்குரார்ப்பணம் செய்வதன் மூலம், மத்திய வங்கி 2025 யூலை 3 அன்று அதன் நிதியியல் வசதிக்குட்படுத்தல் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைற்கல்லை அடைந்துள்ளது. ஆற்றல்வாய்ந்த நிதியியல் தீர்மானத்தை மேற்கொள்ளுதல் மற்றும் நிலைபெறத்தக்க பொருளாதார நலனோன்புகை போன்றவற்றுக்காக பொதுமக்களின் நிதியியல் நடத்தையை மாற்றும் வகையில் அறிவு, திறன்கள், மற்றும் எண்ணப்பாங்குடன் அவர்களை வலுவூட்டுவதற்கான மத்திய வங்கியின் அர்ப்பணிப்பினை இம்முன்னெடுப்புக்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
Published Date:
Thursday, July 3, 2025