46ஆவது சார்க்பினான்ஸ் ஆளுநர்களின் குழுக் கூட்டத்தினை 2024 ஒத்தோபர் 24 அன்று வொஷிங்டன், டிசியில் இலங்கை மத்திய வங்கி தலைமை தாங்கி நடாத்தியது. பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுவின் வருடாந்த கூட்டங்களின் துணை நிகழ்வொன்றாக இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுநர்கள், நிதிச் செயலாளர்கள் மற்றும் சார்க் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் நிதி அமைச்சுக்கள் என்பவற்றிலிருந்தான ஏனைய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.