2025 யூனில் பணச்சுருக்கம் தொடர்ந்தும் தளர்வடைந்தது. இதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணச்சுருக்கமானது மேயின் 0.7 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2025 யூனில் 0.6 சதவீததத்தைப் பதிவுசெய்து, சிறிதளவு குறைவான வீதத்தை எடுத்துக்காட்டியது.
உணவல்லாப் பணச்சுருக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2025 மேயின் 3.3 சதவீதத்திலிருந்து 2025 யூனில் 2.8 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவுப் பணவீக்கம் 2025 மேயில் பதிவாகிய 5.2 சதவீதத்திலிருந்து 2025 யூனில் 4.3 சதவீதத்திற்கு மிதமடைந்தது.
Published Date:
Monday, June 30, 2025