Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கியால் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் கண்டறியப்பட்டவைகள்

2025ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது

முறைமைசார் இடர்நேர்வு அளவீடானது இலங்கையின் நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான சந்தைப் பங்கேற்பாளர்களின் நம்பிக்கையையும் அதில் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகள் பற்றிய அவர்களின் கருத்துக்களையும் அளவிட்டுக் கொள்வதுடன் அதன் தடங்களைக் கண்காணிக்கிறது. அளவீட்டின் மாதிரிக் கட்டமைப்பானது உரிமம் பெற்ற வங்கிகள், உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள், ஒரு சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனி, காப்புறுதி கம்பனிகள், கூறு நம்பிக்கை முகாமைத்துவக் கம்பனிகள், எல்லைக் கடன்வசதி அளிப்பவர்கள் மற்றும் ஒப்புறுதி அளிப்பவர்கள், பங்குத் தரகு கம்பனிகள், உரிமம்பெற்ற நுண்பாக நிதிக்கம்பனிகள் மற்றும் தரமிடல் முகவராண்மைகள் என்பனவற்றை உள்ளடக்குகின்றது.

இலங்கை மத்திய வங்கி 2024ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வினை வெளியிடுகின்றது

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 80இன் கீழான வெளியீடான 2024ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வினை சனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான மாண்புமிகு அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி நந்தலால் வீரசிங்க அவர்களினால் இன்று (2025 ஏப்பிறல் 7) கையளிக்கப்பட்டது.

பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமத்தின் இலங்கைக்கான உயர்மட்ட விஜயம் - பரஸ்பர மதிப்பீட்டு தயாரிப்பு விளக்கவுரை (2025 மாச்சு 10 – 12 வரை)

பணம் தூயதாக்குதல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமத்தின் உயர்மட்ட தூதுக்குழு, 2026 மாச்சில் தொடங்குவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ள பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் பற்றிய இலங்கையின் கட்டமைப்பு தொடர்பில் வரவிருக்கும் பரஸ்பர மதிப்பீட்டிற்கான இன்றியமையாத ஆலோசனைகளையும் உத்திகளையும் வழங்குவதற்காக 2025 மாச்சு 10 – 12 காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தது. தூதுக்குழுவானது இம்முக்கிய மதிப்பீட்டிற்கான இலங்கையின் தயார்நிலை பற்றி ஆராய்வதற்காக உள்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது. 

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2025 பெப்புருவரி

இலங்கைப் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையானது 2025 பெப்புருவரியில், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் கணிசமானளவு உயர்ந்த நடைமுறைக் கணக்கொன்றுடன் தொடர்ந்தும் வலுவடைந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2025 மாச்சில் பணச் சுருக்க நிலைமைகள் தளர்வதை சமிக்ஞைப்படுத்துகின்றது

மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைய 2025 மாச்சில் பணவீக்க நிலைமைகள் தளர்வடையத் தொடங்கியுள்ளன. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக ஏழாவது மாதமாகவும் எதிர்க்கணிய புலத்தில் காணப்பட்டது, இருந்தும் 2025 பெப்புருவரியில் பதிவாகிய 4.2 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2025 மாச்சில் 2.6 சதவீதம் கொண்ட மெதுவான பணச்சுருக்கமொன்றைப் பதிவுசெய்தது.  

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2025 பெப்புருவரியில் மேலும் அதிகரித்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 பெப்புருவரியில் 55.6 சதவீதமாக மேலும் அதிகரித்தது. மாதகாலப்பகுதியில் கட்டடவாக்கப் பணியில் தொடர்ச்சியான அதிகரிப்பை அநேகமான பதிலிறுப்பாளர்கள் அறிக்கையிட்டனர், இருந்தும் வளர்ச்சியினை நிலைநிறுத்துவதற்கு மிகவும் பாரியளவிலான கருத்திட்டங்களுக்கான தேவையை வலியுறுத்தினர்.

Pages