Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்புப் பிரசார நிகழ்வு 2025 இலங்கை மத்திய வங்கியினால் தொடங்கப்பட்டது

“டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்கள் ஊடாக எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்புப் பிரசாரம் 2025 நிகழ்வு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க அவர்களினால் 2025 சனவரி 09 அன்று அம்பாந்தோட்டை மாக்கம் ருகுணுபுர நிருவாகக் கட்டடத்தொகுதியில் தொடங்கிவைக்கப்பட்டது. இப்பிரசாரம் அம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் திரு. பிமல் இந்திரஜித் த சில்வா, நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பூட்டல் பணி வழங்குநர்கள் ஆகியோரின் ஆதரவுடன் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாரிய எண்ணிக்கையிலான அரசாங்க அலுவலர்கள், நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

பெர்பட்சுவல் ட்ரெக்ஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

இலங்கை மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2025 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்க்ஷெரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 திசெம்பரில் தொடர்ந்தும் எதிர்மறையான புலத்திலேயே காணப்பட்டது

மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைவாக, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக நான்காவது மாதமாகவும் எதிர்மறையான புலத்தில் காணப்பட்டு, 2024 நவெம்பரின் 2.1 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2024 திசெம்பரில் 1.7 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் நவெம்பர் 2024

இலங்கைப் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையானது சுற்றுலாத்துறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பவற்றிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட உயர்ந்தளவிலான உட்பாய்ச்சல்களினால் ஆதரவளிக்கப்பட்டு 2024 நவெம்பரில் மேலும் வலுவடைந்தது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் - 2024 நவெம்பர்

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்) 2024 நவெம்பரில் மெதுவான வேகத்திலேனும் விரிவடைந்து, 51.4 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்தது. மாதகாலப்பகுதியில் நிலவிய கடுமையான வானிலை நிலைமைகள் தமது திட்டமிடப்பட்ட பணிகளுக்கு இடையூறு விளைவித்தன என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர். 

முழுவடிவம்

 

வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பை அநுசரித்து எட்டு (08) புதிய இலங்கை ரூபா திறைசேரி முறிகளுக்கான உள்நாட்டு முறிகளின் தெரிவின் கீழ் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளைப் பரிமாற்றல்

2024 நவெம்பர் 25ஆம் திகதியிடப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பரிமாற்றத்திற்கான அழைப்பு விஞ்ஞாபனமானது (“அழைப்பு விஞ்ஞாபனம்”) அதனைத்தொடர்ந்து, 2024 திசெம்பர் 16 அன்று பரிமாற்றத்திற்கான ஒப்புதல் கோரிக்கையின் இறுதி பெறுபேறுகளின் அறிவித்தலுடன், நிதி, திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டது (இதில் பயன்படுத்தப்பட்ட ஆனால் வேறுவகையில் வரைவிலக்கணம் செய்யப்படாத சொற்பதங்கள் அழைப்பு விஞ்ஞாபனத்திலுள்ள அத்தகைய சொற்களுக்கு வழங்கப்பட்ட பொருளைக் கொண்டுள்ளன).

Pages

சந்தை அறிவிப்புகள்