Pro Care (Pvt) Ltd., Shade of Procare (Pvt) Ltd, திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி அதன் 2025ஆம் ஆண்டிற்கான மற்றுமொரு டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பு பிரச்சாரத்தை நுவரெலியாவில் 2025 மாச்சு 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர். முனைவர். நந்தலால் வீரசிங்க அவர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கின்றது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் மோசடியாக உருவாக்கப்படும் காணொளிகள் சமூக வலைத்தளங்கள் மீது, குறிப்பாக முகநூலில் தற்போது பரப்பப்படுகின்றது பற்றி பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படி இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றது. நம்பமுடியாத நிதியியல் ஆதாயங்களுக்கு வாக்குறுதியளிக்கின்ற முதலீட்டுத் திட்டங்களை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பரிந்துரைக்கின்றவாறு இக்காணொளிகள் பொய்யாகச் சித்திரிக்கின்றன. அறியாமலிருக்கின்ற தனிநபர்களை மோசடிக்குள்ளாக்குகின்ற நோக்கத்தினைக் கொண்டு இக்காணொளிகளைக் காண்பவர்களை சந்தேகத்திற்கிடமான வெளிவாரி இணைப்பொன்றிற்கும் இவை தொடர்புபடுத்துகின்றன.
விரிவான வெளிநாட்டுச் செலாவணி சந்தையொன்றின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கான இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பிற்கமைவாக, வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளமொன்றை இலங்கை வெளிநாட்டுச் செலாவணி சந்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கி, மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பனவற்றுக்கு அணுகுவழியினைக் கொண்டிருக்கும் இத்தளமானது விலை கண்டறிதலை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையில் அதிக வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் ஊக்குவிப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதற்கமைய, இந்நோக்கத்திற்காக, புளூம்பேர்க் BMatch வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையினால் தெரிவுசெய்யப்பட்டது.
பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபை இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வினை நிறைவுசெய்து, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 334 மில்லியன்) கொண்ட தொகைக்கு உடனடி பெறுவழியினை நாட்டிற்கு வழங்குகின்றது. இது, பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கை பெறுகின்ற நான்காவது தாகுதியாவதுடன் அதற்கேற்ப இதுவரையிலும் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பன்னாட்டு நாணய நிதிய ஆதரவு சிறப்பு எடுப்பனவு உரிமை 1.02 பில்லியனாக (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.34 பில்லியன்) அதிகரிக்கின்றது.