Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2024 யூன்

2024இன் முதலாவது அரையாண்டில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது சிறியளவு உயர்வான வர்த்தகப் பற்றாக்குறையொன்றிற்கு மத்தியில் தொழிலாளர் பணவனுப்பல்களிற்கான உயர்ந்தளவிலான உட்பாய்ச்சல்களுடன் நேர்க்கணியமாக தொடர்ந்தும் காணப்பட்டது.

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது (ஆண்டிற்காண்டு) 2024 மேயுடன் ஒப்பிடுகையில் சுருக்கமடைந்தபோதிலும் 2024 யூனில் விரிவடைந்தது காணப்பட்டது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 யூலையில் உயர்வடைந்தது, இருந்தும் இலக்கிற்கு கீழேயே காணப்பட்டது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 யூலையில் 2.4 சதவீதமாகக் காணப்பட்டது. பணவீக்கமானது இவ்வுயர்வடைதலின் பின்னரும்கூட 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்திற்கு கீழேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - 2024 யூன்

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 யூனில் 59.5 சுட்டெண் பெறுமதியினை அடைந்து, மூன்றாவது தொடர்ச்சியான அளவீட்டுச் சுற்றுக்களில் அதன் அதிகூடிய சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. தொழிற்துறையானது பல்தரப்பு முகவராண்மைகள் மூலம் நிதியளிக்கப்பட்ட குறிப்பாக, வீதிப் புனரமைப்பு மற்றும் நீர் விநியோகத்துடன் தொடர்புபட்ட கருத்திட்டங்கள் மூலம் பிரதானமாக தூண்டப்பட்டிருந்ததென அநேகமான பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 யூலை 23ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதத்திற்கும் 9.25 சதவீதத்திற்கும் 25 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்தது.

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 யூனில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 யூனில் 56.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவாக்கமொன்றை எடுத்துக்காட்டியது. தொழில்நிலை தவிர அனைத்து துணைச் சுட்டெண்களும் மாத காலப்பகுதியில் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் காணப்பட்டன. 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 யூனில் உயர்வடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 மேயின் 0.9 சதவீதத்திலிருந்து 2024 யூனில் 1.7 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வுயர்வடைதலானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது. இவ்வதிகரிப்புடனும் கூட பணவீக்கமானது 5 சதவீதம் கொண்ட பணவீக்க இலக்கிற்கு நன்கு கீழ் காண்ப்படுகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்