கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, சிங்கள மற்றும் தமிழ் புதுவருட காலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் பருவகால மெதுவடைதலைப் பிரதிபலித்து, 2025 ஏப்பிறலில் 41.4 ஆக வீழ்ச்சியடைந்தது. எனினும், 2025 ஏப்பிறலில் பருவகால வீழ்ச்சியானது முன்னைய ஆண்டின் தொடர்புடைய மாதத்தில் குறிப்பிடப்பட்டதை விடவும் குறைவாகக் காணப்பட்டது. மாதகாலப்பகுதியில் புதுவருட கொண்டாட்டங்களின் காரணமாக தமது கட்டடவாக்கத் தளங்கள் நீடித்த காலப்பகுதிக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன என அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
Published Date:
Friday, May 30, 2025