கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஏப்பிறலில் தயாரிப்பு நடவடிக்கைகளில் பருவகாலரீதியான சுருக்கத்தையும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் எடுத்துக்காட்டுகின்றன.
பருவகாலப் போக்கினை தொடர்ந்து, தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 ஏப்பிறலில் 40.1 ஆக வீழ்ச்சியடைந்தது. உற்பத்தி, புதிய கட்டளைகள், கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை என்பவற்றின் முக்கிய துணைச் சுட்டெண்கள் மாதகாலப்பகுதியில் சுருங்கமடைந்து, மாச்சு மாதத்தின் பருவகால உச்சத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த வீழ்ச்சியை விளைவித்தன.
Published Date:
Friday, May 16, 2025