2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அதன் கீழ் விடுக்கப்பட்ட பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் தொடர்ச்சியாக மீறி மறுத்து வந்திருக்கின்றது. மேலும், நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமையும் போதுமானதற்ற மூலதன மட்டம், சொத்துக்களின் மோசமான தரம், தொடர்ச்சியான இழப்புக்கள் மற்றும் கோருகின்றமை அல்லது முதிர்ச்சியடைகின்றமை போன்ற சந்தர்ப்பங்களில் வைப்பாளர்களின் பணத்தினை மீளச் செலுத்தத் தவறுதல் போன்ற காரணங்களினால் திருப்திகரமானதாக காணப்படவில்லை.
Published Date:
Friday, July 4, 2025