இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2020 யூன் 26ம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு வங்கிகளின் கடன்வழங்கலை துரிதப்படுத்துவதற்கு ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவுதொகைத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருக்கின்றது. இந்த திட்டமானது, 2020 யூலை 01ம் திகதி அன்று தொடங்கிவைக்கப்படவிருப்பதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ. 150 பில்லியன் வரையறையினுள், சௌபாக்யா கொவிட் - 19 மறுமலர்ச்சி வசதி மற்றும் நாணயவிதிச்சட்டத்தின் 83ம் பிரிவின் கீழ் நாணயச்சபையினால் அங்கீகாரமளிக்கப்பட்ட புதிய கடன் வசதிகளுடன் இணையாக செயற்படும்.