வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 செத்தெம்பர்

இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியான வீழ்ச்சி, தொழிலாளர் பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஏற்பட்ட உறுதிப்பாடு என்பன மூலம் துணையளிக்கப்பட்டு 2020 செத்தெம்பரில் மீட்சியடைந்தது.  மாதகாலப்பகுதியில் வணிகப்பொருள் ஏற்றுமதிகளில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக மீளுயர்வு அத்துடன் வணிகப்பொருள் இறக்குமதிகளில் குறைவு என்பன காரணமாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை 2020 செத்தெம்பரில் மேம்பட்டது. 2020 செத்தெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள், 2011இன் இறுதியிலிருந்து மிக உயர்வான ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. நிதியியல் கணக்கில் அரசாங்கப் பிணையங்கள் சந்தையானது மாதகாலப்பகுதியில் சிறிதளவு உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்த அதேவேளை கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தது. உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தைக்கான தேறிய உட்பாய்ச்சல்கள், செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைத் தளர்த்தியதுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை அதிகரித்துக்கொள்வதற்கு வெளிநாட்டுச் செலாவணியினை தேறிய அடிப்படையொன்றில் ஈர்ப்பதற்கு மத்திய வங்கியினை இயலச்செய்தது. இவ் அபிவிருத்திகளைப் பிரதிபலித்து இலங்கை ரூபா 2020 செத்தெம்பர் மாதகாலப்பகுதியில் உயர்வடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, November 9, 2020