Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 நவெம்பரில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2020 ஒத்தோபரின் 4.0 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 4.1 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலைகளின் அதிகரிப்பு மூலம் இது பிரதானமாக தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 10.0 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 10.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.  உணவல்லா பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 1.3 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 1.6 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

நட்வெல்த் செக்குரிட்டீஸ் லிமிடெட்டின் முதனிலை வணிகர் நியமனத்தைப் புறக்கீடு செய்தல்

நட்வெல்த் செக்குரிட்டீஸ் லிமிடெட் மூலம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையொன்றினைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது முதனிலை வணிகரொருவராகத் தொழிற்படுவதற்கு நட்வெல்த் செக்குரிட்டீஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட நியமனத்தை 2020.11.30ஆம் திகதியன்று பி.ப.4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் புறக்கீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

பிட்ச் ரேட்டிங் மூலம் இலங்கையின் தரப்படுத்தல் தரங்குறைக்கப்பட்டமைக்கான பதிலிறுத்தல்

இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தலினை தரங்குறைத்து பிட்ச் ரேட்டிங் மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியமைச்சு பதிலிறுத்தலொன்றினை வெளியிட்டுள்ளது. இதனை கீழேயுள்ள இணைய இணைப்பில் காணலாம்:

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 நவெம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் ஒட்டுமொத்த சந்தை கடன்வழங்கல் வீதங்களில் வீழ்ச்சியினை அவதானித்து, சபையானது கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் இன்மையில் குறிப்பாக உள்நாட்டு பணச் சந்தையில் நிலவுகின்ற குறிப்பிடத்தக்க மிகையான திரவத்தன்மை மட்டங்களைக் கருத்திற்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலளிப்பதற்கு கடன்வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய திருத்தமொன்றிற்கான தேவையினை வலியுறுத்தியது. பொருளாதார மீட்சியடைதலுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சபையானது சம்பளம் பெறுகின்ற பணியாளர்களுக்கென ஈடு பிணையாகக் கொண்ட வீடமைப்புக் கடன்கள் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானித்த அதேவேளை அண்மைய எதிர்காலத்தில் பொருளாதாரத்தின் தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கென கடன்வழங்கல் இலக்குகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2020 ஒத்தோபர்

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் ஒத்தோபரில் சுருக்கமடைந்தன

ஒத்தோபரின் ஆரம்ப பகுதியில் நாட்டில் தோன்றிய கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் பாதகமான தாக்கங்களின் காரணமாக தயாரிப்பு நடவடிக்கைகள் 2020 ஒத்தோபரில் மந்தமான செயலாற்றத்தினை எடுத்துக்காட்டின. இதற்கமைய, தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணானது குறிப்பாக அணியும் ஆடைகள், உணவு மற்றும்  குடிபானத் துறைகளில் உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை மற்றும் கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண்களின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியுடன் 2020 ஒத்தோபரில் 40.3 இற்கு வீழ்ச்சியடைந்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 செத்தெம்பரின் 6.4 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 5.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2019 ஒத்தோபரில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 செத்தெம்பரின் 12.7 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 10.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 1.4 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 1.5 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்