இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2020 ஒத்தோபர்

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் ஒத்தோபரில் சுருக்கமடைந்தன

ஒத்தோபரின் ஆரம்ப பகுதியில் நாட்டில் தோன்றிய கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் பாதகமான தாக்கங்களின் காரணமாக தயாரிப்பு நடவடிக்கைகள் 2020 ஒத்தோபரில் மந்தமான செயலாற்றத்தினை எடுத்துக்காட்டின. இதற்கமைய, தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணானது குறிப்பாக அணியும் ஆடைகள், உணவு மற்றும்  குடிபானத் துறைகளில் உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை மற்றும் கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண்களின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியுடன் 2020 ஒத்தோபரில் 40.3 இற்கு வீழ்ச்சியடைந்தது.

முதலாம் அலையின் தாக்கத்திலிருந்து கடந்த நான்கு மாதகாலப்பகுதியின் போது படிப்படியாக மீட்சியடைந்த பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது பொருளாதாரத்தின் பணிகள் துறை மீதான கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் பாதகமான தாக்கத்தினைப் பிரதிபலித்து 2020 ஒத்தோபரில் 41.8 இற்கு வீழ்ச்சியடைந்தது. நிலுவையிலுள்ள பணிகள் சுட்டெண் தவிர பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிகள் இச்சுருக்கத்திற்கு துணையளித்திருந்தன.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, November 25, 2020