கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 நவெம்பரில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2020 ஒத்தோபரின் 4.0 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 4.1 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலைகளின் அதிகரிப்பு மூலம் இது பிரதானமாக தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 10.0 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 10.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.  உணவல்லா பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 1.3 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 1.6 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 நவெம்பரில் 4.6 சதவீதமான மாற்றமின்றிக் காணப்பட்டது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2020 நவெம்பரில் 0.4 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகளிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் இதற்குக் காரணமாக அமைந்தன. அதற்கமைய, உணவு வகையினுள் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு என்பவற்றின் விலைகள் 2020 நவெம்பரில் அதிகரித்தன. எனினும், மாதகாலப்பகுதியில் உடன் மீன் மற்றும் பழங்கள் என்பவற்றின் விலைகள் வீழ்ச்சியினைப் பதிவுசெய்தன. அதேவேளை, பிரதானமாக போக்குவரத்து (பஸ் கட்டணம்) துணை வகையில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்பின் காரணமாக மாத காலப்பகுதியில் உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 நவெம்பரில் 3.0 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. எவ்வாறாயினும், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமானது 2020 ஒத்தோபரின் 3.4 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 3.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, November 30, 2020