தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 செத்தெம்பரின் 6.4 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 5.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2019 ஒத்தோபரில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 செத்தெம்பரின் 12.7 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 10.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 1.4 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 1.5 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 ஒத்தோபரில் 6.2 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது, 2020 ஒத்தோபரில் 0.1 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு உணவு வகைகளிலுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்களே பிரதான காரணமாக அமைந்தது. அதற்கமைய, உணவு வகையினுள் 2020 ஒத்தோபர் காலப்பகுதியின் போது பிரதானமாக பெரிய வெங்காயம் மற்றும் அரிசி என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. எவ்வாறாயினும், உடன் பழங்கள் மற்றும் உடன் மீன் என்பவற்றின் விலைகளில் வீழ்ச்சிகள் பதிவாகின.

மேலும், மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 4.8 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 4.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமானது 2020 செத்தெம்பரின் 4.3 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, November 23, 2020