இலங்கை அபிவிருத்தி முறிகள் வழங்கல்

இலங்கை அபிவிருத்தி முறிகள், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுவதுடன் ஐக்கிய அமெரிக்க டொலர்களில் பெயர்குறிக்கப்பட்டவையாகும். மிக அண்மைய இலங்கை அபிவிருத்தி முறி ஏலவிற்பனையானது 2020.11.18ஆம் தீர்ப்பனவு திகதியுடன் 2020 நவெம்பர் 10–13 வரை இடம்பெற்றதுடன், இது ஐ.அ.டொலர் 24.82 மில்லியனைத் திரட்டுவதற்கு இயலச்செய்தது. சொல்லப்பட்ட ஏல விற்பனையில் வழங்கப்பட்ட முதிர்வுகள் ஒரு ஆண்டு 2 மாதங்களிலிருந்து 4 ஆண்டுகள் 2 மாதங்கள் வரை வேறுபட்டதுடன் 6.69 சதவீதத்திலிருந்து 6.82 சதவீதம் கொண்ட நிலையான வீதத்தில் வழங்கப்பட்டன.

சொல்லப்பட்ட ஏலவிற்பனையினைத் தொடர்ந்து, இலங்கை அபிவிருத்தி முறிகளுக்காக புதுப்பிக்கப்பட்ட வட்டி/மற்றும் முதலீட்டாளர் ஆர்வம் என்பன காரணமாக இன்றைய அலுவல் நாள் முடிவில் 2020.11.18 அன்று அத்தகைய முதலீடுகளின் தீர்ப்பனவுடன் குறித்த ஏலத்தில் முதலீடு வழங்கல் மீதான தொடர்புடைய முதிர்வுகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட நிறையேற்றப்பட்ட சராசரி நிலையான வீதத்தில் ஐ.அ.டொலர் 62 மில்லியன் கொண்ட மேலதிக முதலீடு திரட்டப்பட்டது. அதற்கமைய, ஐ.அ.டொலர் 75 மில்லியன் கொண்ட மொத்த முன்வைக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் அனைத்து நான்கு முதிர்ச்சிகளிலும் ஐ.அ.டொலர் 86.82 மில்லியன் கொண்ட திரண்ட தொகையொன்று திரட்டப்பட்டது.

Published Date: 

Monday, November 16, 2020