தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 யூலையின் 6.1 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 6.2 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகளிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்புக்களினால் இது தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 யூலையின் 12.9 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 13.2 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில், உணவல்லாப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 யூலையின் 1.0 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 1.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.