வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 திசெம்பர்

நாட்டில் கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து 2020 திசெம்பரில் வணிகப் பொருள் ஏற்றுமதிகள் மீட்சியடைந்த அதேவேளை, அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீது கட்டுப்பாடுகள் தொடர்ந்தமை ஒப்பீட்டளவில் குறைவான உலகளாவிய எரிபொருள் விலைகள் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு வணிகப் பொருள் இறக்குமதிகள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ந்தும்  வீழ்ச்சியடைந்தன. ஒட்டுமொத்தமாக, வர்த்தகப் பற்றாக்குறையானது ஐ.அ.டொ. 2.0 பில்லியனால் கணிசமாக சுருக்கமடைந்தது. வரலாற்றிலேயே உயர்வான மாதாந்த உட்பாய்ச்சலை பதிவுசெய்து, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2020 திசெம்பரிலும் வெளிநாட்டுத் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மைக்கு தொடர்ந்தும்;  துணையளித்தது. நிதியியல் கணக்கில் அரசாங்க பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடு மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இரண்டிலும் வெளிநாட்டு முதலீடு 2020 திசெம்பரில் சிறிதளவு தேறிய வெளிப்பாய்ச்சலை பதிவுசெய்தது. ஆண்டின் இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 5.7 பில்லியனாக இருந்தது. 2020 காலப்பகுதியில் இலங்கை ரூபா 2.6 சதவீதத்தினால் தேய்வடைந்தது. 2020 திசெம்பர் காலப்பகுதியில் இலங்கை ரூபா குறிப்பிடத்தக்க தேய்மான அழுத்;தத்தினை அனுபவித்தது. 2020 திசெம்பரிலும் அதேபோன்று 2021 இதுவரையான காலப்பகுதியிலும் செலாவணி வீதம் சில தளம்பல்களை அனுபவித்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, February 12, 2021