கொவிட்-19 பாதித்த வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகள் மேலும் நீடிக்கப்பட்டிருக்கின்றன
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் புதிய தோற்றம் மற்றும் அதன் காரணமாக கடன்பாட்டாளர்களுக்கேற்பட்ட இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கு 2021.12.31 வரை ஏற்கனவே (2021.08.31 வரை) வழங்கப்பட்ட சலுகைகளை நீடிப்பதனை பரிசீலனையில் கொள்ளுமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) இலங்கை மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளதாக பொதுமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது. உரிமம்பெற்ற வங்கிகள் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் வழங்குகின்ற மேலதிகச் சலுகைகள் இலங்கை மத்திய வங்கியால் குறிப்பிடப்பட்ட நன்மைகளிலும் பார்க்க குறையாத விதத்தில் ஒட்டுமொத்த நன்மைகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.