அரச பிணையங்கள் சந்தையினை அபிவிருத்தி செய்வதற்கான மேலுமொரு கொள்கை வழிமுறையாக, மத்திய வங்கி இன்றிலிருந்து, இரண்டாந்தரச் சந்தையிலுள்ள அரச பிணையங்களின் உண்மையான வர்த்தகப்படுத்தல் தொடர்பில் வர்த்தகப்படுத்தல் புள்ளிவிபரங்களின் தொகுப்பினை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. 2016 ஓகத்து 1 இலிருந்து, அனைத்து முதனிலை வணிகர்களும் முக்கிய பன்னாட்டு நிதியியல் வர்த்தகப்படுத்தல் மற்றும் தகவல் இலத்திரனியல் தளமாக விளங்கும் புளும்போக்கினூடாக மத்திய வங்கியினால் ஒழுங்கு செய்யப்பட்ட வர்த்தகப்படுத்தல் தளத்தில் முதனிலை வணிகர்களுக்கிடையிலான வர்த்தகத்தினை மேற்கொள்ள வேண்டும் என கேட்கப்பட்டிருக்கின்றனர். மேலும் அனைத்து முதனிலை வணிகர்களும் ரூ.50 மில்லியனுக்கு மேற்பட்ட பெறுமதியினைக் கொண்ட அரச பிணையங்களின் அனைத்து உடனடி விற்பனைகளையும் ஒவ்nவாரு கொடுக்கல்வாங்கலும் முடிவடைந்த 30 நிமிடங்களுக்குள் இத்தளத்தின் முதலீட்டாளர்களுக்கு அறிவித்தல் வேண்டும்.
















