இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2026 மேயில் விரிவடைந்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண்னில் பிரதிபலிக்கப்பட்டவாறு 2026 மேயில் 59.1 இற்கு அதிகரித்தது. ஏப்பிறல் பண்டிகைக் காலத்தில்  எதிர்கொண்ட மெதுவடைதலொன்றைத் தொடர்ந்து மாதகாலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகள் மீள்தொடங்கியமை பற்றி அநேகமான அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் அறிக்கையிட்டனர்.  

மாத காலப் பகுதியில் வலுவான கட்டடவாக்க கருத்திட்ட வழங்கல்களைப் பிரதிபலித்து, புதிய கட்டளைகள் சுட்டெண் மேயில் மேலும் அதிகரித்தது. அத்துடன், முன்னெடுக்கப்படுகின்ற ஊழியர் ஆட்சேர்ப்பினால் துணைபுரியப்பட்டு, தொழில்நிலைச் சுட்டெண் தொடர்ச்சியாக விரிவடைந்தது. எனினும், தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களின் தொடர்ச்சியாக வரையறுக்கப்பட்டளவில் கிடைக்கப்பெறுகின்றமை முக்கியமான தடையொன்றாக பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர். கட்டுமான நடவடிக்கைகளின் அதிகரிப்பிற்கு இசைவாக, கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண் மேயில் மீளெழுச்சியடைந்தது. எனினும், தார் போன்ற பொருட்களின் பற்றாக்குறைகளுடன் சேர்த்து முக்கியமான கட்டவாக்கப் பொருட்களின் தொடர்ச்சியான உயர்வடைந்த விலைகள், பல அளவீட்டுப் பதிலிறுப்பாளர்களிடையே முக்கிய கரிசனையொன்றாகக் காணப்பட்டது. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரம் பரந்தளவில் முன்னனைய மாதத்தின் மட்டத்திலேயே காணப்பட்டது.

கட்டடவாக்க கருத்திட்டங்களின் நிலையான முன்னெடுப்பு மற்றும் மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றங்களின் தளர்வடைதலைப் பற்றிய எதிர்பார்க்கைகள் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாத காலப் பகுதிக்கான கட்டடவாக்க நிறுவனங்களிடையே வியாபார எண்ணப்பாங்கு சாதகமாகக் காணப்பட்டது.

PDF

Published Date: 

Tuesday, June 30, 2026