இலங்கை கொள்வனவு முகாமையாளர் அளவீடு - 2016 ஒத்தோபர்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 செத்தெம்பரில் 57.7 உடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் 56.5 ஆகக் காணப்பட்டது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியானது 2016 ஒத்தோபரில் தயாரிப்பு நடவடிக்கைகள் மிதமான வேகத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டுகின்றது. செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்களின் செயலாற்றத்தில் காணப்பட்ட மிதமான வேகமே முக்கிய காரணமாகும். கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண் ஒத்தோபரில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து எதிர்வரும்; காலத்திற்காக இருப்புக்கள் குவிக்கப்பட்டமையினை எடுத்துக் காட்டிய வேளையில் நிரம்பலர் வழங்கல் நேரம் சிறிதளவில் அதிகரித்தது. தொழில்நிலைத் துணைச் சுட்டெண்ணும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியைக் காட்டியது. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து மற்றைய அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலே காணப்பட்டன. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு மேம்பாடொன்றினைக் காட்டின. 

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 செத்தெம்பரில் 57.7 சுட்டெண் புள்ளிகளிலிருந்து ஒத்தோபரில் 59.3 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்தது. முன்னைய ஆண்டின் பெறுமதியினை விட கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அதிகரித்தமைக்கு பணிகள் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2016 ஒத்தோபரில் உயர்ந்த வீதத்தில் விரிவடைந்தமையே காரணமாகும். பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்களில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கை தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றிற்கான துணைச் சுட்டெண்களில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே காரணமாகும். எனினும், நிலுவையிலுள்ள பணிகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2016 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்தன. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் தொகுப்பு செயன்முறையில் பரிசீலனைக்கு எடுக்கப்படாத விலைகள் கடட் ணம் 2016 ஒத்தோபரில் உயர்ந்ததொரு விலைகளில் அதிகரித்தது.  

முழுவடிவம்

Published Date: 

Tuesday, November 15, 2016