இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, உளந்hட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பரிமாறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 ஒத்தோபர் 19ஆம் நாளன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி. கல்யாணி தகநாயக்க அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு.எச்.அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 

பணம் தூயதாக்கலும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலும் பன்னாட்டு ரீதியாகவும் உள்நாட்டு ரீதியாகவும் தொடர்புபட்ட நிதியியல் குற்றங்களாகும். இவை உலகளாவிய பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடும்.  உலகம் பூராகவும் வரி சம்பந்தமான குற்றங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக, பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தொடர்பான சர்வதேச கொள்கை வகுப்பாளரான, நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழு (FATF) வரிக் குற்றங்களை பணம் தூயதாக்கலிற்கு அடிப்படைக் குற்றங்களாக உள்ளடக்குவதற்கு நாடுகளிற்கு சிபாரிசு செய்கின்றது. இதன் பினன்ணியில் நிதியியல் உளவறிதல் பிரிவிற்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குமிடையிலான உள்ளக இணைப்பும் ஒத்துழைப்பும் வரி ஏய்ப்பு தொடர்பில் இலங்கையில் ஏற்கெனவே இருக்கின்ற பணம் தூயதாகக்லிற்கு எதிரான பொறிமுறையை வலுப்படுத்தவதற்கு உதவும்.

நிதியியல் உளவறிதல் பிரிவு இலங்கைச் சுங்கத்துடனும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடனும் இதேபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களினை ஏற்கெனவே செய்துள்ள வேளையில், மேற்குறிப்பிடட் நோகக்த்திற்காக மற்றைய தொடர்பான உளந்hட்டு அரச முகவர்களுடனும் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றது.

 

Published Date: 

Monday, October 24, 2016