முன்மொழியப்பட்ட பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாட்டின் கீழ் தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படும் என்ற ஊகம் முற்றுமுழுதாக அடிப்படையற்றது

பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாடு தொடர்பில் அண்மையில் அறிவிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கான கோரிக்கை, தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் அனைத்து பணவனுப்பல்களும் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு கிடைத்ததன் மீது இலங்கை ரூபாவாக மாற்றுவதனை இலக்காகக் கொண்டது என தன்னலம் கொண்ட தரப்பினர்களால் பரப்பப்பட்டுவருகின்ற ஊகம் அடிப்படையற்றதாகும். 

இக்குற்றச்சாட்டில் உண்மைகள் எதுவுமில்லையென இலங்கை மத்திய வங்கி திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றது. 

2021 மே 28 தொடக்கம் தொழிலாளர் பணவனுப்பல்களை இலங்கை ரூபாய்களாக தன்னார்வமாக மாற்றப்படுகின்றவற்றில் 10 சதவீதத்தினை,  அத்தகைய மாற்றல்கள் மீது அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மேலதிகமான ரூ.2 ஊக்கத்தொகையினை வலுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்வதற்கு உரிமம்பெற்ற வங்கிகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளன. 

மத்திய வங்கிக்கு ஏற்கனவே கிடைக்கின்ற இப்பாய்ச்சலினை பிணையமாக்குகின்ற சாத்தியப்பாட்டினைக் கண்டறிவதற்காக தற்போது முன்மொழிவுக்கான கோரிக்கை தொடங்கப்பட்டுள்ள அதேவேளை, பிணையமாக்கப்பட்ட நிதியிடல் ஒழுங்கேற்பாடானது ஏதேனும் தொழிலாளர் பணவனுப்பல்கள் மீது தாக்கமெதனையும் கொண்டிராது என்பதுடன் கடந்தகாலங்களைப் போன்று பணவனுப்பல்களை இலங்கையிலுள்ள வெளிநாட்டு நாணயக்; கணக்குகளில் தங்குதடையின்றி தொடர்ந்தும் வைத்திருக்கலாம் அல்லது இலங்கை ரூபாவாக மாற்றலாம்.

அதற்கமைய, பொதுமக்கள்  விழிப்பாக இருக்குமாறும் அவ்வாறான உண்மையற்ற தகவல்களால் தவறாக வழிநடத்தப்படுவதற்கு இடமளிக்கவேண்டாமெனவும் கோரப்படுகின்றது.

அதேவேளை, இலங்கை மத்திய வங்கியானது அரசாங்கத்துடன் கூட்டிணைந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு முறைசார் வழிகளூடாக அனுப்பப்படுகின்ற நிதியங்களுக்கு ஊக்குவிப்பளிப்பதன் வாயிலாக தொழிலாளர் பணவனுப்பல்களின் அதிகரிப்பினை தொடர்ந்தும் வசதிப்படுத்தும்.

Published Date: 

Sunday, November 14, 2021