Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, உளந்hட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பரிமாறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 ஒத்தோபர் 19ஆம் நாளன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி. கல்யாணி தகநாயக்க அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு.எச்.அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 

2016 செத்தெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஓகத்தில் 4.5 சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 4.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்துள்ளன. 

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 ஓகத்தில் 3.6 சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

வைப்பாளர்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்குமாக இலங்கை மத்திய வங்கி நான்கு கடன்தீராற்றலற்ற நிதியியல் நிறுவனங்கள் தொடர்பில் பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டுவரும் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கிறது.

2016.10.10 அன்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, நாணயச் சபை 2016.10.14 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், நிதியியல் முறைமையில் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையினை பாதுகாக்கும் நோக்குடன் தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் பின்னணியில் பல வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் தொடர்பில் பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வருவது பற்றி பரிசீலனைக்கு எடுத்தது. இதற்கமைய, நாணயச் சபை, மூன்று நிதிக் கம்பனிகளின் வைப்பாளர்களுக்கும் என்றஸ்ட் செக்குறிட்டீஸ் பிஎல்சி இல் உள்ள அரச பிணையங்களுடன் இணைக்கப்பட்ட முதலீடுகளிலுள்ள சட்ட ரீதியான முதலீட்டாளர்களுக்கும் மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் விதத்தில் பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டுவரும் பொறிமுறையொன்றிற்கு ஒப்புதலளித்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 யூலை

வர்த்தகப் பற்றாக்குறை குறைவடைந்தமை, அதிகரித்த சுற்றுலா வருவாய்கள், நிதியியல் கணக்கிற்கான உயர்நத் உட்பாய்ச்சல்கள் என்பனவற்றின் காரணமாக 2016 யூலையில் வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் மேம்பட்டது. வர்த்தகப் பற்றாக்குறை யூலையில் சுருக்கமடைந்தமைக்கு இறக்குமதிகளில் ஏற்பட்ட குறைப்பு காரணமாக விளங்கியதுடன், இது ஏற்றுமதிகளில் ஏற்பட்ட குறைப்பினை விஞ்சிகக் hணப்பட்டது. சுற்றுலா வருவாய்கள் அதிகரித்த வேளையில், இம்மாதகாலப்பகுதியில் தொழிலாளர் பணவலுப்பல்கள் முன்னைய ஆண்டின் தொடர்ச்சியான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தன. 10ஆவது நாட்டிறக்hன பன்னாட்டு முறிகளின் வழங்கலிருந்தான ஐ.அ.டொலர் 1500 மில்லியன் கொண்ட பெறுகைகள், கூட்டுக்கடன் வசதிகளிலிருந்தான ஐ.அ.டொலர் 300 மில்லியன், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை என்பனவற்றில் பதிவுசெய்யப்பட்ட தேறிய உட்பாய்ச்சல்கள் என்பன நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களை பலப்படுத்தியமையின் காரணமாக சென்மதி நிலுவை மீதான அழுத்தம் தளர்வடைந்தது.

முழுவடிவம்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2016 செத்தெம்பர்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் செத்தெம்பரில் 57.7 ஆக அமைந்ததுடன் இது, 2016 ஓகத்தின் 53.5 இலிருந்து 4.2 சதவீதம் கொண்டதொரு அதிகரிப்பாகும். செத்தெம்பரில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு புதிய கடட்ளைகள் மற்றும் உற்பத்தித் துணைத் துறைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட முன்னேற்றஙக் ள் தூண்டுதலாக அமைந்தன. தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தித் துணைச் சுட்டெண்கள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்த வேளையில் கொள்வனவு இருப்புச் சுட்டெண் மாற்றமின்றிக் காணப்பட்டது. எனினும், தொழில்நிலை மற்றும் நிரமப்லர் வழங்கல் நேர துணைச் சுட்டெண்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தன. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து, நடுநிலையில் காணப்பட்ட நிரமப்லர் வழங்கல் நேர சுட்டெண்கள் தவிர்ந்த அனைத்து துணைச் சுட்டெண்களும் 50.0 அடிமட்டத்திற்கு மேலே காணப்பட்டன. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு மேம்பாடு உள்ளினைக் காட்டின. 

நாணயச் சபையினால் விடுக்கப்பட்ட அறிக்கை

நாணயச் சபை, 2016 ஒத்தோபர் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதன் கூட்டத்தில் 2016 மாச்சு 31இல் முடிவடைந்த ஆண்டுப் பகுதியிலும் அதேபோன்று 2016 ஓகத்து 31இல் முடிவடைந்த ஐந்து மாத காலப்பகுதியிலும் முதனிலை வணிகர்களின் நிதியியல் செயலாற்றம்  உள்ளிட்ட தொழிற்பாடு மீதான இடைக்கால அறிக்கையினைப் பரிசீலனையில் எடுத்துக் கொண்டது. முதனிலை வணிகர்களின் செயலாற்றத்திலும் அதேபோன்று வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகளின் தன்மையுடன் தொடர்பான குறிப்பிட்ட விடயங்களிலும் கரிசனைக்குரிய பெருமளவு ஒவ்வாத தன்மைகள் கவனிக்கப்பட்டுள்ளன. இது, தொடர்பில் தலத்திலான பரீட்சிப்பு அறிக்கைகள் தொடர்பாக தற்பொழுது இடம்பெற்றுவரும் தயாரிப்புச் செயன்முறையினை விரைவாக நிறைவு செய்யுமாறு நாணயச் சபை அறிவுறுத்தியிருக்கிறது. இது, எதிர்கால நடவடிக்கைகளின் மீது நாணயச் சபை நேரகாலத்துடன் தீர்மானமொன்றினை மேற்கொள்வதனை இயலச்செய்யும். 

Pages

சந்தை அறிவிப்புகள்