புதிய உதவி ஆளுநர்களின் நியமனம்

நாணயச் சபை, 2017 ஓகத்து 31ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் திருமதி. கே. எம். ஏ. என். டவுளுகல, திருமதி எஸ். குணரத்ன, திரு. என். டபிள்யு. ஜி. ஆர். பி. நாணயக்கார, திருமதி ரி. எம். ஜெ. வை. பி. பெர்னாண்டோ, திரு. ஜெ. பி. ஆர். கருணாரத்ன மற்றும் திருமதி கே. குணதிலக ஆகிய ஆறு உயர் அலுவலர் வகுப்புத் தரம் ஐஏ அலுவலர்களை 2017 ஓகத்து 31ஆம் திகதியிலிருந்து உதவி ஆளுநர்களாகப் பதவியுயர்த்தியுள்ளது.  இப்பதவி உயர்வுகள் வங்கியினுடைய சுமூகமான தொழிற்பாட்டினை உறுதி செய்யும் வகையில் பதவி உயர்வுகளாலும் ஓய்வுபெறுகையினாலும் 2016 மேயிலிருந்து 2017 ஓகத்து வரை ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

திருமதி. கே. எம். ஏ. என் டவுளுகல

நாணயச் சபையின் துணைச் செயலாளரான இவர், நிதித் திணைக்களம் மற்றும் அலுவலகப் பணிகள் முகாமைத்துவத் திணைக்களம் என்பவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநராகவும் அத்துடன் நாணயச் சபையின் துணை செயலாளராகவும் தொடர்ந்து செயற்படுவார்.

திருமதி டவுளுகல அவர்கள் மத்திய வங்கியில் 26 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளதுடன் வங்கித்தொழில் திணைக்களம், பன்னாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களம், நிதித் திணைக்களம், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம், நிதியியல் உறுதிப்பாட்டு கற்றைகள், திணைக்கள மட்ட பிரதேச அலுவலகம் - வடமத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் மற்றும் செயலகத் திணைக்களம் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். மேலும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சிற்கு விடுவிக்கப்பட்டிருந்த இவர் பொது நிறுவனங்களின் பணிப்பாளராகக் கடமையாற்றினார். இவர், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சிற்கு விடுப்பிலிருந்த காலப்பகுதியில் அரச நிறுவனங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றியுள்ளார். அமைச்சில் பதவி வகித்த வேளையில், இலங்கை வங்கியின் பதவி வழி அலுவலராகவும் ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையின் அங்கத்தவராகவும் பணியாற்றினார். இவர் மத்திய வங்கியில், நிதியியல் உறுதிப்பாட்டுக் குழு, இடர்நேர்வு முகாமைத்துவக் குழு, வெளிநாட்டு ஒதுக்குகள் முகாமைத்துவக் குழு மற்றும் கணக்காய்வுக் குழு ஆகியவற்றில் அங்கத்தவராகவும் பணியாற்றியுள்ளார்.

திருமதி டவுளுகல அவர்கள் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் அதேநேர மேற்பார்வை மற்றும் தளத்திலான மேற்பார்வை போன்றவற்றைப் பலப்படுத்தல், நிதியியல் வியாபார சட்ட உருவாக்கம், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையின் முதன்மை முகாமைத்துவ ஆளணியினருக்கான உடற்தகுதி மற்றும் தனியுரிமை தேவைப்பாடுகளை அறிமுகப்படுத்தல், பல்வேறு அழுத்தம் நிறைந்த கம்பனிகளை மீள்கட்டமைத்தல் வங்கியின் பன்னாட்டு நிதியியல் அறிக்கையிடல் நியதிகளுடன் முழுமையாக இணங்குவித்தலினை அடைதல் போன்றவை தொடர்பில் பங்களிப்புச் செய்துள்ளார். திருமதி டவுளுகல அவர்கள் அரச உடமை நிறுவனங்களின் மீள்கட்டமைப்பிற்கு வசதியளிக்கும் வகையில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் அரச நிறுவனத் திணைக்களத்தின் தொழிற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பில் விசேட பங்களிப்பொன்றை வழங்கியிருக்கிறார்.

திருமதி டவுளுகல, ஐக்கிய இராச்சியத்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து நிதியியல் மற்றும் வியாபாரப் பொருளியலில் முதுமானி விஞ்ஞானப் பட்டத்தினையும் சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழத்திலிருந்து வியாபார நிர்வாக முதுமானிப் பட்டத்தினையும் கொண்டுள்ளார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் முகாமைத்துவக் கணக்காளர்களின் பட்டய நிறுவகத்தின் சக உறுப்பினர் ஆவார்.

 

திருமதி. எஸ் குணரத்ன

வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய அமெரிக்கா, வொ~pங்டன் டி.சி. யிலுள்ள பன்னாட்டு நாணய நிதியத்தின் முன்னாள் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளரான இவர் பொருளாதார ஆராய்ச்சி, புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம் போன்றவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநராக இருப்பார்.

திருமதி குணரத்ன மத்திய வங்கியில் 31 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தினைக் கொண்டுள்ளதுடன் 2012 தொடக்கம் 2015 வரை பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளராவதற்கு முன்னர் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தில் பல்வேறு பதவிகளில் 21 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் பணியாற்றியுள்ளார். இவர், பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்திற்கு முன்னர் வங்கித்தொழில் திணைக்களத்தில் பணியாற்றியுள்ளார். திருமதி குணரத்ன அவர்கள், நாணயக் கொள்கைக் குழு, நாணயத் தொழிற்பாட்டுக் குழு, நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு, வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவக் குழு மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவக் குழு போன்றவை உள்ளடங்கலாக பல்வேறு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதன் மூலம் வங்கிக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளார். பன்னாட்டு நாணய நிதியத்தில் மாற்று நிறைவேற்று அலுவலர் பதவியினைக் கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கைக்கான உடன்படிக்கை மூலம் துணைநில் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி போன்ற நிகழ்ச்சித்திட்டங்களின் நடைமுறைக்கிடுதல் நோக்கிய தனது அயராத பங்களிப்பினை வழங்கியுள்ளார். திருமதி குணரத்ன நன்கு பரீட்சயமான பொருளியலாளராக இருப்பதனால், இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்களில் ஒன்றாகிய நாட்டின் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டினை அடைந்து கொள்வதில் பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளார். திருமதி குணரத்ன, நாணய மற்றும் பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகள், வெளிநாட்டுத் துறைக் கொள்கைகள் மற்றும் நிதியியல் உறுதிப்பாடு போன்ற பரப்புக்களில் பல எண்ணிக்கையிலான பன்னாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் செயலமர்வுகளில் பங்குபற்றியுள்ளார். இவர் நன்கு அறிந்த விரிவுரையாளராக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரங்குகளில் பல எண்ணிக்கையிலான காட்சிப்படுத்தலுடன் கூடிய விரிவுரைகளை வழங்கியுள்ளார்.

திரு. என். டபிள்யு. ஜி. ஆர். டி. நாணயக்கார

முன்னாள் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளரான இவர், பொதுப்படுகடன், நுண்பாக நிதி நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் பாதுகாப்புப் பணிகள் போன்ற திணைக்களங்களுக்குப் பொறுப்பான உதவி ஆளுநர் ஆவார்.

மத்திய வங்கியில் 24 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய திரு. நாணயக்கார பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு, பொதுப்படுகடன், வங்கி மேற்பார்வை, பன்னாட்டுத் தொழிற்பாடுகள், உள்நாட்டுத் தொழிற்பாடுகள் மற்றும் வங்கித்தொழில் போன்ற திணைக்களங்களில் பணியாற்றியிருக்கிறார். நிதியியல் முறைமை உறுதிப்பாடு, நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல், படுகடன் மற்றும் சொத்துப்பட்டியல் முகாமைத்துவம் மற்றும் பன்னாட்டு நிதி, வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவம் மற்றும் நாணயக் கொள்கை நடைமுறைக்கிடல் போன்ற மத்திய வங்கித்தொழிலின் மைய விடயங்களில் இவரது ஆற்றலின் மூலம் திரு. நாணயக்கார இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு குறிப்பிடத்தக்கதொரு பங்களிப்பினை வழங்கியுள்ளார். மேலும், திரு. நாணயக்கார, வங்கி ஒழுங்குபடுத்தல்களின் வினைத்திறன்களை அதிகரித்தல், படுகடன் உபாயங்களின் உருவாக்கம் மற்றும் நடைமுறைக்கிடல், செலவினைக் குறைக்கும் அதேவேளை அரச படுகடன் சொத்துப்பட்டியலின் இடர்நேர்வு விபரங்களை முன்னேற்றுதல், பல் நாணய வெளிநாட்டு ஒதுக்குச் சொத்துப்பட்டியலினை முகாமை செய்தல், மத்திய வங்கியின் வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவ முறைமையினைச் சீரமைத்தல், முதற்தடவையாக வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவச் செயன்முறையினை தன்னியக்கப்படுத்தல் போன்றவற்றுடன் மிக காத்திரத்தன்மையுடன் தொடர்புபட்டிருந்தார். மேலும், திரு. நாணயக்கார அவர்கள் இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனத்தின் ஆளுகைச் சபை, நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு, இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழிகாட்டல் குழு போன்றவற்றின் ஒரு உறுப்பினராகவும் உள்நாட்டுப் படுகடன் முகாமைத்துவக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

இவர், ஐக்கிய அமெரிக்காவின் அமெரிக்கன் பல்கலைக்கழகத்திலிருந்து நிதியியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து வியாபார நிர்வாக இளமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனத்தின் சக உறுப்பினராகவும் இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் ஐக்கிய அமெரிக்காவின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் நிறுவனத்தின் உறுதிப்படுத்தப்பட்ட நிதியியல் பணிகள் கணக்காய்வாளராகவும் உள்ளார்.

திருமதி. ரி. எம். ஜே. வை. பி. பர்னாந்து

முன்னாள் செலாவணிக் கட்டுப்பாட்டாளரான இவர் செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணக்களம், வங்கி மேற்பார்வைத் திணைக்களம், சட்டம் மற்றும் இணங்குவிப்புத் திணைக்களம் என்பவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநராக இருக்கின்றார்.

திருமதி பர்னாந்து அவர்கள் வங்கி மேற்பார்வைத் திணைக்களம், செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் மற்றும் வங்கித்தொழில் அபிவிருத்தி ஆகிய துறைகளில் 27 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தினைக் கொண்டுள்ளார்.  

திருமதி பர்னாந்து அவர்கள், சர்வதேச நியமங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் உறுதியான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பை நடைமுறைக்கிடுவதற்கு தனது தலைமைத்துவத்தை வழங்கியதன் மூலம் நிதியியல் உறுதிப்பாட்டைப் பேணுவதற்கு முக்கியமான பங்கினை வழங்கியுள்ளார். திருமதி பர்னாந்து அவர்கள் கொடுகடன் தகவல் பணியகம், தேசிய மாணிக்கக்கல் மற்றும் நகை அதிகாரசபை, கோல்டன் கீ கிறடெடிற் கார்ட் கம்பனி லிமிடெட், ஜிகே கொஸ்பிட்டல்ஸ் லிமிடெ;, ஜெற்விங் சிம்பனி லிமிடெட் போன்றவற்றில் பணிப்பாளர் ஒருவராகவும் மற்றும் இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் கூட்டாண்மை ஆளுகை நியமங்களை மதிப்பாய்வு செய்யும் குழு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் பேச்சுவார்த்தை தொடர்பான முதலீட்டு துணைக்குழு, தென்கிழக்காசிய மத்திய வங்கியின் பயிற்சி தொடர்பான ஆலோசனைக் குழு ஆகியவற்றில் அங்கத்தவர் ஒருவராகவும் இலங்கை மத்திய வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளர்.

திருமதி பர்னாந்து அவர்கள் வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல், பொதுவான வங்கித்தொழில் செயற்பாடுகள், நிதி நிறுவனங்களின் இடர்நேர்வு முகாமைத்துவம், கம்பனி ஆளுகை, பலயீனமான வங்கிகளை மீளமைத்தல் ஆகிய வௌ;வேறு அம்சங்களில் அறிவை வளர்ப்பதற்கும் இற்றைப்படுத்துவதற்கும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் மன்றங்கள் ஆகியவற்றில் பங்குபற்றினார். அவர் பல்வேறு பயிற்சி நிகழ்வுகளிலும் வேலை சம்பந்தமான குழு விவாதங்களிலும்  வள ஆளணியினராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்துள்ளார். மேலும், இவர் நிதியியல் உறுதிப்பாட்டுக் குழு, ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களுக்கிடையிலான சபை, இடர்நேர்வு முகாமைத்துவக் குழு மற்றும் மத்திய வங்கியின் தேசிய சபை ஆகிய குழுக்களின் பதவி வழி அலுவலராக இருந்துள்ளதுடன் அத்தகைய குழுக்களின் குறிக்கோள்களிற்கும் நோக்கங்களிற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவர் நிதியியல் பொருளியலில் முதுமானிப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் வர்த்தக இளமானிப் பட்டப்படிப்பை சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் பெற்றவராவார்.

திரு. ஜே. பி. ஆர். கருணாரத்ன

முன்னாள் நாணயத் திணைக்களத்தின் கண்காணிப்பாளரான இவர் நாணயத் திணைக்களம், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை, வசதிகள் முகாமைத்துவத் திணைக்களம் என்பவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநர் ஆவார்.

திரு. கருணாரத்ன 26 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய வங்கியில் பணியாற்றியுள்ளதுடன் அவர்கள் செயலகத் திணைக்களம், பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம், வங்கி மேற்பார்வைத் திணைக்களம், கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்புத் திணைக்களம், பொதுப்படுகடன் திணைக்களம், நாணயத் திணைக்களம் என்பவற்றில் பணியாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் திரு. கருணாரத்ன அவர்கள் மத்திய வங்கியில் பணியாற்றிய காலப்பகுதியில் நிதியியல் துறை, நாணய முகாமைத்துவம், பொது நிறுவனத் துறை ஆகியவற்றில் பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார். இவர் நாணய முகாமைத்துவ முறைமை மற்றும் தொழிற்பாடுகள் மற்றும் பாசல் ஐஐ கட்டமைப்பை இலங்கையில் நடைமுறைப்படுத்தல் போன்ற செயற்பாடுகளில் துடிப்புடன் தன்னை உட்படுத்தியிருந்தார் மற்றும் இவர் உச்சநீதிமன்றத்தால் முதன்மைச் செயற்பாட்டு அலுவலராக சரிவடைந்த கோல்டன் கீ கிறடெடிற் கம்பனியின் முதலீட்டாளர்களுக்கு அப்பணத்தை மீளளிப்பதற்கான பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு வெளியகக் குழுவிற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்டார். திரு. கருணாரத்ன அவர்கள் முக்கியமாக பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் “அபி வெனுவென் அபி” என்ற நிதியை உருவாக்குதல் போன்ற பல முக்கியமான விடயங்களில் ஆலோசகராக பங்கு வகித்துள்ளார். அவர் இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கியாளர் நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றால் ஒழுங்கமைக்கப்பட்ட கருத்தரங்குகள் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஆகியவற்றில் கிரமமான வள ஆளணியினராகவும் இருந்துள்ளார். இவர் பல காட்சிப்படுத்தல்களுடன் கூடிய விரிவுரைகளை மேற்கொண்டுள்ளதுடன் பன்னாட்டு நிகழ்வுகளில் குழு அங்கத்தவராகவும் கடமையாற்றியுள்ளார். அவர் வங்கி மேற்பார்வை விடயங்களில் ஆராய்ச்சி செய்ய ஆர்வம் கொண்டவராகவும் அத்துறையிலேயே ஆராய்ச்சிப் பத்திரங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

திரு. கருணாரத்ன அவர்கள் நிதியியலில் வர்த்தக முதுமானி பட்டத்தை நியூ சவுத் வேல்ஸ் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்திலும் பிரயோகப் புள்ளிவிபரவியலில் முதுமானி டிப்ளோமாவையும் விஞ்ஞான இளமானிப் பட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். அவர் பட்டய முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனத்தின் சக அங்கத்தவராகவும் உறுதிப்படுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனத்தின் இணை அங்கத்தவராகவும் உள்ளார்.

திருமதி. கே. குணதிலக

முன்னாள் உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரான திருமி கே. குணதிலக அவர்கள் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம், பயிற்சி மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் ஆகியவற்றின் உதவி ஆளுநராக இருக்கின்றார்.

திருமதி குணதிலக அவர்கள் இலங்கை மத்திய வங்கியின் 31 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டதுடன், கிராமப்புறக் கடன், பொருளாதார ஆராய்ச்சி, பிரதேச அபிவிருத்தி, பன்னாட்டுத் தொழிற்பாடுகள், பயிற்சி, ஊழியர் சேம நிதியம், மனிதவளம், உள்ளகக் கணக்காய்வு ஆகிய துறைகளின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அவரது நீண்ட கால வங்கிப் பணியில் திருமதி குணதிலக அவர்கள் ஊழியர் சேம நிதியத் தரவுகளை இலத்திரனியல் மயப்படுத்தும் எண்ணக்கருவை உருவாக்கி, தொடக்கி வைத்து பத்திரிகையல்லாத அலுவலகச் சூழலை நோக்கி நகர வழிவகுத்தவராவார். இவர், ஊழியர் சேம நிதிய அங்கத்தவர்களுக்கான வினைத்திறனான பணியை மேம்படுத்த பல திட்டங்களை வகுத்துள்ளார். மேலும், அவர் மற்றையவர்களுக்கு மத்தியில் வங்கியின் மனித வள திணைக்கள முகாமைத்துவத்திற்குப் பாரியளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

திருமதி குணதிலக அவர்கள் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்தில் வள ஆளணியினராகவும் இலங்கை வங்கியாளர் நிறுவன வருகை விரிவுரையாளராகவும் உள்ளார். அவர் தற்போது டிஸ்ரன்ஸ் லேர்னிங்க் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் அங்கத்தவராகவும் வேளாண்மை மற்றும் வேளாண்மைக் காப்புறுதிச் சபையின் வேளாண்மையாளர்கள்Æ மீனவர்கள் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நலன் திட்டங்கள் ஆலோசனைக் குழுவில் அங்கத்தவராகவும் தொழிற்பட்டுள்ளார். இவர் இலங்கை உள்ளகக் கணக்காய்வாளர் நிறுவகத்தின் உறுப்பினருமாவார். திருமதி குணதிலக அவர்கள் ஊழியர் சங்கத்தினால் வங்கியினுள் அமுலாக்கப்பட்ட நிறுவன சமூகப் பொறுப்புத் திட்டங்களான சுனாமியினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான நம்பிக்கை நிதியம் என்பவற்றில் துடிப்புடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

திருமதி. குணதிலக அவர்கள் பொருளியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தை அமெரிக்கா இலிநொயிஸ் பல்கலைக்கழகத்திலும் வியாபார நிருவாகத்தில் மனித வள முகாமைத்துவத்தில் சிறப்புத் தேர்ச்சியுடனான முதுமானிப் பட்டத்தை போஸ்கிறசுவேற் இன்ஸ்ரிரியூட் ஒவ் மனேஜ்மன்ட், சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் சமூகவியல் கலை பிரிவில் இளமானிப் பட்டத்தை சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் பொருளியல் அபிவிருத்தி முதுமானிப் டிப்ளோமாவை கொழும்பு பல்கலைக்கழத்திலும் பெற்றுள்ளார். இவர் மனிதவள முறைமை மற்றும் நுட்பங்கள் தொழில் டிப்ளோமாவை பிஐஎம் சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.

 

Published Date: 

Friday, September 15, 2017