“இலங்கை சமூக பொருளாதார தரவுகள் - 2017” இன் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடான தரவு ஏடு “இலங்கை சமூக பொருளாதாரத் தரவு – 2017” ஆனது பொதுமக்களின் தகவல்களுக்காக இப்போது கிடைக்கக்கூடியதாகவுள்ளது. தற்போதைய தரவு ஏடானது தொடரின் 40ஆவது வெளியீடாகும்.

எடுத்துச் செல்வதற்கு இலகுவான இத்தரவு ஏடானது நாட்டின் தோற்றப்பாடு, முதன்மைப் பொருளாதார குறிகாட்டிகள்; நாட்டின் ஒப்பீடுகள்; சமூக பொருளாதார நிலைமைகள்; மனித வளங்கள்; தேசிய கணக்குகள்; வேளாண்மை; கைத்தொழில்; பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்புக்கள்; விலைக;ம் கூலிகளும்; வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலர் வெளிநாட்டு நிதி; அரச நிதி மற்றும் பணம் வங்கித்தொழில் மற்றும் நிதி போன்ற தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

நடைமுறைத் தகவல்களின் சமூக பொருளாதாரத் தரவுகளின் ஓர் பரந்தளவான தரவுகளை ஒரு சுருக்க வடிவில் இத்தரவு ஏடானது வழங்குவதால், இது கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், தொழில்நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுககு மிகவும் பயனுள்ள ஆதாரமான பொருளாக இருக்கும்.

ஆங்கில மொழியிலான இவ்வெளியீட்டினை சென்றல் பொயின்ற் கட்டடத்தில் (சதாம் வீதி, கொழும்பு 01) அமைந்துள்ள மத்திய வங்கியின் விற்பனை மற்றும் விநியோகக் கருமபீடத்திலும் (58, சிறி ஜெயவர்த்தனபுர மாவத்தை, இராஜகிரியவில் உள்ள) வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்திலும் மற்றும் மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களிலும் (மாத்தறை, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் அநுராதபுரம்) கொள்வனவு செய்யமுடியும். அத்துடன் இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை மத்திய வங்கியின் வெப்தளத்தின் (http://www.cbsl.gov.lk) ஊடாக அணுகலாம்.

Published Date: 

Friday, September 15, 2017