“இலங்கை பொருளாதார, சமூக புள்ளிவிபரங்கள் - 2017” வெளியீடு

இலங்கை மத்திய வங்கி, ஷஷஇலங்கை பொருளாதார சமூக புள்ளிவிபரங்கள் - 2017 என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

இவ்வெளியீடானது, தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி, அரச நிதி, வங்கித்தொழில் மற்றும் நிதியியல் நிறுவனங்கள், பணம் மற்றும் மூலதனச் சந்தைகள், விலைகள் மற்றும் கூலிகள், குடித்தொகை மற்றும் தொழிற்படை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொலைத் தொடர்பூட்டல் பணிகள், காலநிலை ஆகிய துறைகளிலுள்ள இலங்கையின் பொருளாதார, சமூக குறிகாட்டிகளையும் மற்றைய நாடுகளிலுள்ள பொருளாதார, சமூக குறிகாட்டிகள் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும், தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட வீட்டு அலகுகள் வருமானம் மற்றும் செலவின அளவீட்டிலிருந்து பெறப்பட்ட இலங்கையின் வாழ்க்கை நிலைமைகள், வறுமை மற்றும் வீட்டு அலகுகளின் பண்புகள் மீதான தகவல்களும் இவ்வெளியீட்டில் கிடைக்கத்தக்கதாகவுள்ளன. மேலும், இது முக்கிய பொருளாதார மாறிகள் தொடர்பாக மாகாண மட்டத்தில் பகுக்கப்பட்ட தரவுகளையும் உள்ளடக்குகிறது. பயன்பாட்டாளர்களின் பல்லினத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இவ்வெளியீட்டிலுள்ள புள்ளிவிபரங்கள் காலத்தொடர் குறுக்குப் பிரிவு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. தரவுகளை பொருளாதாரத்தின் அண்மைய போக்குகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு பயன்படுத்த முடியுமென்பதுடன் தொழில் முயற்சியாளர்கள், கொள்கை வகுப்போர், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் உபயோகமானதாகவும் இருக்கும். ஆங்கில மொழியிலான இவ்வெளியீட்டினை சென்றல் பொயின்ற் கட்டடத்தில் (சதாம் வீதி, கொழும்பு 01) அமைந்துள்ள மத்திய வங்கியின் விற்பனை மற்றும் விநியோகக் கருமபீடத்திலும் (58, சிறி ஜெயவர்த்தனபுர மாவத்தை, இராஜகிரியவில் உள்ள) வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்திலும் மற்றும் மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களிலும் (மாத்தறை, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் அநுராதபுரம்) கொள்வனவு செய்யமுடியும். அத்துடன் இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை மத்திய வங்கியின் வெப்தளத்தின் (http://www.cbsl.gov.lk) ஊடாக அணுகலாம்.

Published Date: 

Monday, August 28, 2017