நாணயச் சபை, 2016 ஒத்தோபர் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதன் கூட்டத்தில் 2016 மாச்சு 31இல் முடிவடைந்த ஆண்டுப் பகுதியிலும் அதேபோன்று 2016 ஓகத்து 31இல் முடிவடைந்த ஐந்து மாத காலப்பகுதியிலும் முதனிலை வணிகர்களின் நிதியியல் செயலாற்றம் உள்ளிட்ட தொழிற்பாடு மீதான இடைக்கால அறிக்கையினைப் பரிசீலனையில் எடுத்துக் கொண்டது. முதனிலை வணிகர்களின் செயலாற்றத்திலும் அதேபோன்று வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகளின் தன்மையுடன் தொடர்பான குறிப்பிட்ட விடயங்களிலும் கரிசனைக்குரிய பெருமளவு ஒவ்வாத தன்மைகள் கவனிக்கப்பட்டுள்ளன. இது, தொடர்பில் தலத்திலான பரீட்சிப்பு அறிக்கைகள் தொடர்பாக தற்பொழுது இடம்பெற்றுவரும் தயாரிப்புச் செயன்முறையினை விரைவாக நிறைவு செய்யுமாறு நாணயச் சபை அறிவுறுத்தியிருக்கிறது. இது, எதிர்கால நடவடிக்கைகளின் மீது நாணயச் சபை நேரகாலத்துடன் தீர்மானமொன்றினை மேற்கொள்வதனை இயலச்செய்யும்.