இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 யூலை

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் யூலை மாதத்தில் 54.3 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 யூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 1.8 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகள் 2017 யூன் மாதத்தில் ஒரு குறைவான வேகத்தில் விரிவடைந்தமையினை குறித்து காட்டுவதுடன், இது பிரதானமாக முன்னைய மாதத்தில் சேர்க்கப்பட்ட மேலதிக இருப்புகளின் பாவனைகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட குறைவினாலும் அதிகளவான தொழிலாளர் சுழற்சிவீதத்தினை கணக்கில் கொள்ளும் போது திறனற்ற தொழிலாளர்களின் மாற்றீடுகளில் காணப்பட்ட சிக்கல் தன்மையின் காரணமாக தொழிலாளர் துணைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட குறைவினாலும் உந்தப்பட்டது. மாதகாலப்பகுதியில் புதிய கடட் ளைகள் மற்றும் நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண்கள் மெதுவடைந்து காணப்பட்ட வேளையில், உற்பத்தி துணைச்சுட்டெண் அதே அளவில் காணப்பட்டது. மேலும், கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை யூலை மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது.  இதற்குமேலாக, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடொன்றினை குறித்துக்காட்டியது. 

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 யூனின; 59.2 சுட்டெண் புள்ளியிலிருந்து யூலை மாதத்தில் 59.1 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. பணிகள் துறையானது யூன் 2017உடன் ஒப்பிடுகையில ஒரு சிறிதளவான குறைவினை பதிவு செய்து யூலை 2017இல் தொடர்ச்சியான ஒரு மேம்பாட்டினைப் பதிவுசெய்ததுடன், இது வியாபார நடவடிக்கைகள் மற்றும் தொழில்நிலை சுட்டெண்களினால் செலுத்தப்பட்டது. நிலுவையிலுள்ள பணிகள் சுட்டெண்ணும் யூன் 2017உடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தது. நிதியியல் துறையானது அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பணியாற்றுதல் மற்றும் சேவை வினைத்திறனினை மேம்படுத்துதல் போன்றவற்றுக்காக தொழில்நுட்ப அடைவினை அறிமுகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஊடாக புதிய வியாபாரங்களின் விரிவாக்கத்திற்கு பங்களிப்பு செய்தது. மேலும், வியாபார நடவடிக்கையில், உல்லாசப்பயணிகள் வருகையின் அதிகரிப்பு மற்றும் அடுத்த மூன்று மாதத்திற்கான சாதகமான எதிர்பார்ப்புக்கள் காரணத்தால் பிரதானமாக தங்குமிடம், உணவு மற்றும் குடிபான துறையில் ஒரு அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. எந்தவித பண்டிகைகளின் கேள்விகள் இல்லாமை காரணமாக விதிக்கப்பட்ட விலைகள் சுட்டெண்ணானது 2017 யூன் உடன் ஒப்பிடும் போது 2017 யூலையில் ஒரு குறைவு உணரப்பட்டது. எவ்வாறாகினும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அவர்களுடைய வருடாந்த பேரூந்து கட்டண மீளாய்வின் படி பேரூந்து கடட்ணத்தினை 6.28 சதவீதத்தினால் அதிகரித்தது. இதே வேளையில், தொழிலாளர் செலவிற்க்கான எதிர்பார்ப்புகள் 2017 யூனில் சிறிதளவில் குறைவடைந்து காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, August 15, 2017