இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 ஓகத்து

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஒகத்து மாதத்தில் 54.4 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 யூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 0.1 சுட்டெண் புள்ளிகளாலான  ஒரு சிறிதளவான அதிகரிப்பாகும். இவ் அதிகரிப்பானது, மாதகாலப்பகுதியில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட மெதுவான செயற்பாட்டாலும் மற்றும் எதிர்காலத்தில் வழங்கப்படுவதற்காக ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய கட்டளைகளை பூர்த்தி செய்வதற்கான பராமரிக்கப்படுகின்ற மேலதிக இருப்புகளின் காரணமாக கொள்வனவு இருப்பு துணை சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பினால்  உந்தப்பட்டது. நிரம்பலர் வழங்கல் நேரம் பிரதானமாக சில நிறுவனம் சார்ந்த விசேடமான தடைகளினால் நீட்சியடைந்தது.  அதிகளவான தொழிலாளர் சுழற்சிவீதத்தினை கணக்கில் கொள்ளும் போது திறனற்ற தொழிலாளர்களின் மாற்றீடுகளில் காணப்பட்ட சிக்கல் தன்மையின் காரணமாக, பிரதானமாக ஆடை சார் துறையில் தொழில்நிலை சுட்டெண் குறைவடைந்து காணப்பட்டது. இருப்பினும், கொ.மு.சுட்டெண்ணின் தொழில்நிலை சுட்டெண்ணை தவிர்ந்த அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை ஒகத்து மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது.  இதற்குமேலாக, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடொன்றினை குறித்துக்காட்டியது. 

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 யூலையின் 59.1 சுட்டெண் புள்ளியிலிருந்து ஒகத்து மாதத்தில் 60.1 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. பணிகள் துறையானது 2017 யூலையுடன் ஒப்பிடும் போது 2017 ஒகத்து மாதத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காடடு;வதுடன் இது புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பினால் செலுத்தப்பட்டது. 2017 யூலை உடன் ஒப்பிடும்  போது  தொழில்நிலை மட்டமானது மெதுவான வேகத்தில் அதிகரித்த வேளையில் நிழுவையிலுள்ள பணிகள்; 2017 ஓகத்தில் வீழ்ச்சியடைந்தது. நிதியியல் மற்றும் தொலைத்தொடர்பூட்டல் துறைகள்; அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பணியாற்றுதல் மற்றும் சேவை வினைத்திறனினை மேம்படுத்துதல் போன்றவற்றுக்காக தொழில்நுட்ப அடைவினை அறிமுகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஊடாக புதிய வியாபாரங்கள்  மற்றும் வியாபார நடவடிக்கைகள் விரிவாக்கத்திற்கு பங்களிப்பு செய்தது. வியாபார நடவடிக்கைகளில் தங்குமிடம், உணவு மற்றும் குடிபான துறையும் ஒரு அதிகரிப்பினை அறிக்கையிட்டது. பண்டிகைகளின் கேள்விகள் காரணமாக விதிக்கப்பட்ட விலைகள் சுட்டெண்ணில் பிரதானமாக தங்குமிடம், உணவு மற்றும் குடிபான துறையில் ஒரு அதிகரிப்பு உணரப்பட்டது. இதே வேளையில், தொழிலாளர் செலவிற்கான எதிர்பார்ப்புகள் துணைச்சுட்டெண் 2017 ஒகத்து மாதத்தில் தொடர்ச்சியாக குறைவடைந்து காணப்பட்டது.  

முழுவடிவம்

Published Date: 

Friday, September 15, 2017