இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி முறிகளுக்கான புதிய முதனிலை வழங்கல் முறையொன்றினை அறிமுகப்படுத்தவுள்ளது. 2017 யூலை 27 இலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில், 2015 பெப்புருவரியிலிருந்து நடைமுறையில் காணப்படும் திறைசேரி முறிகளுக்கான முழுமையான ஏல அடிப்படையிலான வழங்கல் முறைமைக்கு பதிலாக இந்த புதிய முறைமை மாற்றியமைக்கப்படுகின்றது. புதிய முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கான பிரதான காரணமானது அரசாங்கத்தின் உள்நாட்டு கடன்பாடுகளின் போது வினைத்திறனையும் வெளிப்படைத் தன்மையினையும ;மேலும் அதிகரிப்பதாகும்.
இந்த புதிய முறைமையானது மிகவும் கடட் மைப்பானதாக காணப்படுவதுடன் ஒழுங்கான மாதாந்த திறைசேரி முறிகளின் வழங்கல்களை உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு மாதாந்த வழங்கலானது இரண்டு வேறுபட்ட முதிர்ச்சிகளை கொண்ட முறித் தொடர்களினை வழங்குவதுடன், தொடர்களின் முதிர்ச்சிக் காலப்பகுதியானது சந்தையில் கிடைக்கத்தக்க வளங்களுடன் ஒத்துப்போவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.