திறைசேரி முறி தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் தொடர்பான தெளிவுபடுத்தல்

திறைசேரி முறிகளை முதிர்ச்சித் திகதிக்கு முன்னர் அவற்றிற்கான கொடுப்பனவுகளை செலுத்த போதுமான நிதியில்லை என்பதனைக் காட்டும் தவறான ஊடக அறிக்கையினை இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கின்றது.

இலங்கை மத்திய வங்கி மேற்குறிப்பிட்ட ஊடக அறிக்கைகளில் துல்லியமான தன்மையில்லை என்பதனை அவதானித்திருப்பதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு படுகடனைத் தீர்ப்பனவு செய்வதில் அரசாங்கம் அப்பளுக்கற்ற படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுப் பதிவேடுகளைக் கொண்டிருப்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. முதிர்ச்சியில் வட்டியையும் முதல் தொகையினையும் தவணைத் திகதிக்கு முன்னர் கொடுப்பனவு செய்யாது, தவணைத் திகதியில் (சரியான நேர கொடுப்பனவு) கொடுப்பனவு செய்வது, அரசாங்கத்தின் சார்பில் பொதுப்படுகடனை முகாமைப்படுத்துகின்ற அதன் முகவர் தொழிற்பாடுகளை ஆற்றும் போது இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படுகின்ற விதியாகும்.

2018இல் திறைசேரி உண்டியல்களுக்கு முதிர்ச்சியில் செலுத்துவதற்கான நிதியத்தின் கிடைப்பனவும் (வட்டிக்கூறுகள் உட்பட) திறைசேரி முறிகளுக்கான கூப்பன் முதிர்ச்சியும் கூட அரசாங்கம் அதன் படுகடன் பொறுப்புக்களை தீர்ப்பனவு செய்வதில் அதனிடம் கணிசமானளவு திரவத்தன்மை கிடைக்கத்தக்கதாக இருப்பதனை எடுத்துக்காட்டியது. பின்வரும் அட்டவணை 2018ஆம் ஆண்டில் இதுவரை திறைசேரி முறிகளுக்கான கூப்பன் மற்றும் முதிர்ச்சிக் கொடுப்பனவுகளின் தொகை திறைசேரி முறிகளில் வழங்கல் மூலம் திரட்டப்பட்ட ரூ.222,020 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.324,448 மில்லியன் கொண்ட தொகைiயாக இருந்தமையினை எடுத்துக்காட்டுகிறது.

திறைசேரி முறித் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் (01.01.2018 இலிருந்து 25.04.2018 வரை)

முதிர்ச்சிக் கொடுப்பனவுகள் கூப்பன்/வட்டி வீதங்கள் மொத்தக் கொடுப்பனவுகள்
187,638.32 136,809.71 324,448.03

 

 

 

 

இதே காலப்பகுதியில் 2018.04.25இல் உள்ளவாறான இலங்கை மத்திய வங்கி வசமுள்ள திறைசேரி உண்டியல் உடமைகள் 2017.04.25 அன்றுள்ளவாறான ரூ.293,039 மில்லியனிலிருந்து ரூ.69,114 மில்லியனுக்கு கணிசமாக வீழ்ச்சியடைந்தன.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் வட்டி மற்றும் முதிர்ச்சிக் கொடுப்பனவுகள் தொடர்பில் ஒரு சில நன்மைபெறும் சொத்தக்காரர்களுக்கு கொடுப்பனவுகள் செய்யப்பட்டனவெனினும் அவை சட்ட ரீதியான வழங்குத்தொடுப்புக்கள் காரணமாக கணக்குகள் முடக்கப்பட்டுள்ள முதனிலை வணிகரொருவரின் கணக்கில் பிடித்து வைக்கப்பட்டிருப்பதனால் பொருத்தமான சட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதும் காலக்கிரமத்தில் அத்தொகைகள் விடுவிக்கப்படும் என்பதனையும் மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகிறது.

Published Date: 

Wednesday, April 25, 2018