Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுப் படுகடன் மற்றும் ஒதுக்குகள் - மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதனை ஆய்வு செய்கையில் கடன்பாடுகளை மாத்திரமன்றி படுகடன் மீள்கொடுப்பனவுகளையும் அடையாளம் காண்பது அவசியமானதாகும்

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் மற்றும் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுகள் தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

 செய்தி விடயத்தின் உள்ளடக்கமானது நாட்டின் வெளிநாட்டு நிலைமை தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற தோற்றப்பாடொன்று பற்றி விபரிக்கின்றது. 2015 – 2018 காலப்பகுதியில் அரசாங்கத்தின் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 8.9 பில்லியன் கொண்ட கடன்பாடுகள் மத்திய வங்கியின் ஒதுக்குகளுக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டதாக இது தெரிவிக்கின்ற அதேவேளையில், அரசாங்கத்தின் அலுவல்சார் படுகடன் முகாமையாளராக விளங்கும் மத்திய வங்கியினால் இக்காலப்பகுதியில் ஒதுக்குகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணிசமான படுகடன் மீள்கொடுப்பனவுகள் பற்றி இக்கட்டுரையானது கவனத்தில் கொள்ளவேயில்லை.

2018 ஏப்பிறலில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 மாச்சின் 2.8 சதவீதத்திலிருந்து 2018 ஏப்பிறலில் 1.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன் இது 2016 பெப்புருவரிக்குப் பின்னர் ஏற்பட்ட மிகக்குறைந்த அளவுமாகும். 2018 ஏப்பிறலின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்க வீழ்ச்சியானது 2017 ஏப்பிறலின் போது உணவு வகையில் காணப்பட்ட பொருட்களின் விலைகளின் அதிகரிப்பினால் தோற்றுவிக்கப்பட்ட உயர்வான தளத்தின் மூலம் பிரதானமாத் தூண்டப்பட்டிருந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 மாச்சின் 6.7 சதவீதத்திலிருந்து 2018 ஏப்பிறலில் 6.1 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பு உடமையாளர்களுக்கான கொடுப்பனவு

இது ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமகால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பன தொடர்பான 2018.01.02 திகதியிடப்பட்ட பத்திரிகை அறிவித்தலுக்கு மேலதிகமானதாகும்.
 

ரூபாவின் தேவையற்ற தேய்வினைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருக்கிறது

இலங்கை ரூபாவின் மீது நாணய அழுத்தத்தினை தேவைப்படுத்துகின்ற அடிப்படை அம்சங்கள் எதுவும் காணப்படவில்லை. தற்பொழுது மொத்த வெளிநாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 9.1 பில்லியனாக ஆரோக்கியமான மட்டத்தில் காணப்பட்டதுடன் உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீத சுட்டெண்கள் நாணயம் போட்டித்தன்மையுடையதாக விளங்குவதனை எடுத்துக்காட்டின.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் - 2018 ஏப்பிறல்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாச்சு மாதத்திலிருந்து 20.1 சுட்டெண் புள்ளிகள் குறைவடைந்து ஏப்பிறல் மாதத்தில் 45.5 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்வதன் மூலம் சரிவடைந்திருந்தது. முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட உயர் மட்டத்திலான நடவடிக்கைகளை தொடர்ந்து ஏப்பிறல் மாதத்தில் காணப்பட்ட புத்தாண்டு விடுமுறைகள் தயாரிப்பு நடவடிக்கைகளை பின்னோக்கி இழுத்தத்துடன் முன்னைய வருடங்களில் அவதானிக்கப்பட்ட போக்கிற்கு ஏற்ற விதத்திலும் காணப்பட்டது. ஏப்பிறல் மாதத்தில் கொ.மு.சுட்டெண்ணில் காணப்பட்ட சரிவிற்கு உற்பத்திகள் மற்றும் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட சரிவுகளே பெரிதும் காரணமாக அமைந்தன. கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் இம்மாதகாலப்பகுதியில் குறைவடைந்திருந்தன. மேலும், நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரம் இம்மாதகாலப்பகுதியில் மெதுவடைந்ததுடன் நிரம்பலர்கள் குறைந்தளவில் பரபரப்பாக காணப்பட்டமையினை பகுதியளவில் சுட்டிக்காட்டுகின்றது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 பெப்புருவரி

சுற்றுலா வருகைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சி, பங்குப் பரிவர்த்தனைக்கான தொடர்ச்சியான தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் என்பனவற்றிற்கு மத்தியிலும் வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்க விரிவு காணப்படுகின்றமை 2018 பெப்புருவரியில் ஏற்றுமதித் துறைச் செயலாற்றத்தின் முக்கிய பண்பாகக் காணப்பட்டது. ஏறத்தாழ 3½  ஆண்டு கால ஒட்டுமொத்த வணிக இறக்குமதிகளில் மிக விரைந்த அதிகரிப்பிற்கு பின்னால் முக்கிய தூண்டுதலாக தங்க இறக்குமதிகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்புக் காணப்பட்டதுடன் இது, 2018 பெப்புருவரியில் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் விரிவடைய வழிவகுத்தது. 2018 சனவரியிலிருந்து அவதானிக்கப்பட்ட வளர்ச்சி உத்வேகத்தின் தொடர்ச்சியாக சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 2018 பெப்புருவரியில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. எனினும், சனவரியில் காணப்பட்ட வளர்ச்சியினைத் தொடர்ந்து, 2018 பெப்புருவரியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் வீழ்ச்சியடைந்தன. சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகளின் தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்து 2018 பெப்புருவரியில் அரச பிணையங்கள் சந்தையில் ஏற்பட்ட தேறிய வெளிப்பாய்ச்சலை சமநிலைப்படுத்துவதற்கு உதவியிருக்கிறது.

Pages

சந்தை அறிவிப்புகள்