வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 பெப்புருவரி

சுற்றுலா வருகைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சி, பங்குப் பரிவர்த்தனைக்கான தொடர்ச்சியான தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் என்பனவற்றிற்கு மத்தியிலும் வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்க விரிவு காணப்படுகின்றமை 2018 பெப்புருவரியில் ஏற்றுமதித் துறைச் செயலாற்றத்தின் முக்கிய பண்பாகக் காணப்பட்டது. ஏறத்தாழ 3½  ஆண்டு கால ஒட்டுமொத்த வணிக இறக்குமதிகளில் மிக விரைந்த அதிகரிப்பிற்கு பின்னால் முக்கிய தூண்டுதலாக தங்க இறக்குமதிகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்புக் காணப்பட்டதுடன் இது, 2018 பெப்புருவரியில் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் விரிவடைய வழிவகுத்தது. 2018 சனவரியிலிருந்து அவதானிக்கப்பட்ட வளர்ச்சி உத்வேகத்தின் தொடர்ச்சியாக சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 2018 பெப்புருவரியில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. எனினும், சனவரியில் காணப்பட்ட வளர்ச்சியினைத் தொடர்ந்து, 2018 பெப்புருவரியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் வீழ்ச்சியடைந்தன. சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகளின் தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்து 2018 பெப்புருவரியில் அரச பிணையங்கள் சந்தையில் ஏற்பட்ட தேறிய வெளிப்பாய்ச்சலை சமநிலைப்படுத்துவதற்கு உதவியிருக்கிறது. 2018 ஏப்பிறலில் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் இரண்டு வெற்றிகரமான வழங்கல்களின் மூலம் சென்மதி நிலுவை மேலும் வலுவடைந்ததுடன் இது மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை 2018 ஏப்பிறல் இறுதியில் ஐ.அ.டொலர் 9.9 பில்லியனுக்கு பெருமளவிற்கு அதிகரித்திருப்பதுடன் இவ்வதிகரிப்பு இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த மட்டமாகவும் காணப்படுகிறது. அதேவேளை, இலங்கை ரூபா 2018 மே 11 நாள் வரையான இவ்வாண்டுப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக 3.2 சதவீதத்தினால் தேய்வடைந்திருக்கிறது. முழுவடிவம்

Published Date: 

Friday, May 11, 2018