2017ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க இலங்கை நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது அறுபத்து எட்டாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களால் மாண்புமிகு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆண்டறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டவாறான 2017இல் இலங்கையின் பொருளாதாரத்தின் செயலாற்றம் பற்றிய சாராம்சம் கீழே தரப்படுகிறது:
உண்மைப் பொருளாதார வளர்ச்சி தளர்வடைந்து 2017இல் பல ஆண்டு தாழ்வினைப் பதிவுசெய்த போதிலும் கடந்த இரு ஆண்டுகளாக மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டிற்கான     கொள்கை     வழிமுறைகள் குறிப்பிடத்தக்களவு மேம்பாடுகளிற்கு வழிகோலின. 2015இன் இறுதியிலிருந்து படிப்படியாக இறுக்கமாக்கப்பட்ட மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாடு மத்திய வங்கியின் முதன்மைக் கொள்கை வட்டி வீதங்களை 2017 மாச்சில் 25 அடிப்படைப் புள்ளிகளினால் உயர்த்தியதன் மூலம் மேலும் இறுக்கமாக்கப்பட்டது. அதிகரித்து சென்ற சந்தை வட்டி வீதங்கள் உயர்ந்த மட்டங்களில் உறுதியடைவதற்கு அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் அரச பிணையங்கள் சந்தையுடன் தொடர்புபட்ட முன்னேற்றங்கள் 2015 மற்றும் 2016இல் நிலவிய சில பிறழ்வுகளைத் திருத்திய அரச பிணையங்களின் விளைவுகளின் கணிசமான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் ஆண்டின் இறுதியில் சில சந்தை வட்டி வீதங்கள் மீது கீழ் நோக்கிய தாக்கத்தினைச் செலுத்தின. உயர்ந்த பெயரளவு மற்றும் உண்மை வட்டி வீதங்கள், ஆதரவான பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகளுடன் இணைந்து 2017இல் நாணயக் கூட்டுக்களின் வளர்ச்சியில் ஒரு படிப்படியான மெதுவடைதலை ஏற்படுத்தியது. இந்த மெதுவடைதலானது மிகத் தீவிரமான திறந்த சந்தைத் தொழிற்பாடுகளினூடாக மத்திய வங்கி உள்நாட்டுப் பணச் சந்தையில் திரவத்தன்மையைப் பொருத்தமான மட்டங்களில் பேணுவதனூடாக அடையப்பட்டிருந்தது. வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களின் மத்திய வங்கியின் தேறிய கொள்வனவுகளினால் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் விரைவாகக் கட்டியெழுப்பப்படுவதன் தாக்கத்தினை எதிரீடு செய்வதற்காக மத்திய வங்கியின் அரச பிணையங்களின் இருப்பு கணிசமானளவு குறைக்கப்பட்டது. குறுங்கால வட்டி வீதங்களை, குறிப்பாக வங்கிகளுக்கிடையிலா அழைப்புப் பணச் சந்தை வீதத்தை விரும்பப்பட்ட மட்டங்களில் பேணிக் கொள்வதற்குத் தீவிரமான திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் துணைபுரிந்த வேளையில் வழங்கல்பக்க தடங்கல்களால் உந்தப்பட்ட எதிர்பார்க்கப்பட்டதனை விட உயர்ந்த முதன்மைப் பணவீக்கத்திற்கு மாறாக பணவீக்க எதிர்பார்க்கைகளை நிலைநிறுத்துவதற்கு மேம்படுத்தப்பட்ட நாணயக் கொள்கை தொடர்பூட்டல் உபாயம் துணைபுரிந்தது.

 

முழுவடிவம்

Published Date: 

Thursday, April 26, 2018