இலங்கையின் பொருளாதாரச் செயலாற்றத்திலும் இயலாற்றலிலும் வெளிநாட்டு ஆர்வம் நம்பிக்கைக்கான சமிக்ஞையினை காண்பிக்கின்றது.

இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பில் அண்மைய நாட்களில் கடுமையான கரிசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதன் பின்னணியில், பன்னாட்டு மூலதனச் சந்தையிலிருந்து இலங்கையின் பொருளாதாரத்திற்கான வெளிநாட்டு ஆதரவு மட்டத்தினை மதிப்பிடுவது பயன்மிக்கதாகும். பன்னாட்டு மூலதனச் சந்தைகள் தமது கணிப்பீடுகளில் வளைந்து கொடுக்காமையினால் இது, இலங்கையின் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் பற்றிய சுயாதீன அளவீட்டுக்கருவியொன்றாகவிருக்கும்.

 

    • ஐ.அ.டொலர் 2.5 பில்லியன் தொகையுடைய நாட்டுக்கான பன்னாட்டு முறியொன்று (முன்னொருபோதுமில்லாத பெரியளவு) வெற்றிகரமாக வழங்கப்பட்டது. இது 2.6 தடவைகள் மேலதிகமாக கோரப்பட்டியிருந்தது. உலகின் மிகப்பாரியதும் மிகவும் புகழ்பெற்றவையுமான முதலீட்டு நிதியங்கள் சிலவற்றினால் பாரிய கட்டளைகள் முன்வைக்கப்பட்டன.
    • நாட்டுக்கான பன்னாட்டு முறி பெறுகைகளின் கிடைப்பனவுகளுடன், மொத்த  அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 9.9 பில்லியனாக அதிகரித்துள்ளன. இது வரலாற்று ரீதியாக மிகவுயர்ந்த மட்டமாகும்.
    • ஐ.அ.டொலர் 1 பில்லியன் தவணைக்கடனொன்றுக்கான முன்மொழிவிற்கான கோரிக்கைக்கு மிகவும் சாதகமான பதிலிறுத்தலொன்று காணப்படுகின்றது.  இக்கடனை அதிகரிப்பதற்கும் மிகவும் செலவுமிக்க தற்போதுள்ள படுகடனை மீளச் செலுத்துவதற்கும் அதிகரிக்கின்ற பெறுகைகளை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் பரிசீலிக்கின்றது.
    • உலக நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்க வட்டி வீதங்களை இயல்பாக்குதல் அதேபோன்று ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் யப்பான் போன்ற நாடுகளில் சமகாலத்தில் நிகழ்ந்த வளர்ச்சி காரணமாக தோற்றம்பெற்றுவரும் சந்தைகளில் இருந்தான வெளிப்பாய்ச்சல்களுக்கு மத்தியிலும், பங்குச் சந்தை அத்துடன் ரூபாவில் குறித்துவைக்கப்பட்ட அரசாங்க பிணையங்கள் சந்தை ஆகிய இரண்டிலும் தேறிய ஒன்றுசேர்ந்த உட்பாய்ச்சல்கள் காணப்படுகின்றன.
        • 2018ஆம் ஆண்டின் போது இன்றுவரை கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் ஐ.அ.டொலர் 9.6 மில்லியனுக்கு முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தையூடாக பங்குரிமை மூலதனத்தில் வெளிநாட்டு சொத்துப்பட்டியல் முதலீடு காணப்படுகின்றது. 2017இல், உட்பாய்ச்சல் ஐ.அ.டொலர் 278.5 மில்லியனுக்கு வகைகூறியது.
        • இவ்வாண்டில் இன்று வரை அரசாங்க பிணையங்கள் சந்தைக்கான தேறிய உட்பாய்ச்சல் ஐ.அ.டொலர் 6.05 மில்லியனுக்கு வகைகூறியது. 2017இல், தேறிய உட்பாய்ச்சல்கள் ஐ.அ.டொலர் 441 மில்லியன் வகைகூறியது.
    • 2017இல் ஐ.அ.டொலர் 1.9 பில்லியன் கொண்ட வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல்கள் தாழ்ந்த தளமொன்றின் அடிப்படையில் இருப்பினும் அனைத்து காலங்களிலுமில்லாத பதிவொன்றாகக் காணப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, தன்னியக்கமான எரிபொருள் விலையிடல் சூத்திரத்திற்கான அமைச்சரவை அனுமதிக்கு உட்பட்டு, பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் 4ஆவது மீளாய்வு மீதான அலுவலர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பன்னாட்டு நாணய நிதிய வசதியின் 5 ஆவது தொகுதி 2018 யூனில் இடம்பெறும்மென எதிர்பார்க்கப்படுகிறது.

2017 யூனின் பின்னர், பேரண்டப் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தோற்றப்பாடு ஆகியன மேம்பட்டு வருகின்றமை தொடர்பில் பன்னாட்டு நாணய நிதியம் பல சாதகமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் இரண்டு தரப்படுத்தல் முகவராண்மைகளான, எஸ்அன் பி மற்றும் பிட்ச் என்பன தோற்றப்பாட்டினை எதிர்மறையிலிருந்து நிலையான தன்மைக்கு மாற்றியுள்ளன.

நாட்டினுள் தமது பணத்தின் உட்பாய்ச்சல்கள் மூலம் இதற்கு உறுதுணையளித்துள்ள வெளித் தரப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன மதிப்பீடுகளின் அடிப்படையில், இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் மற்றும் அதன் வாய்ப்புக்கள் பற்றிய சாதகமான ஆர்வத்தினை மேற்குறிப்பிட்ட விடயங்கள் பிரதிபலிக்கின்றன.

பொருளாதாரப் போட்டித் தன்மைக்கு ஆதரவளிக்கின்ற இறைத் திரட்சி, முன்மதியுடைய நாணயக் கொள்கைகள் மற்றும் நெகிழ்வுத் தன்மைமிக்க செலாவணி வீதம் போன்ற ஆற்றல்வாய்ந்த பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ந்து நிலைக்கச் செய்வதன் மூலம் இதனை கட்டியெழுப்புவது தவிர்க்கமுடியாத காரணிச் சந்தைகளை வலுப்படுத்தல்; முதலீட்டு சூழ்நிலையை மேம்படுத்தல்; முதலீட்டு ஊக்குவிப்புக்களை அதிகரித்தல்; வர்த்தக வசதிப்படுத்தல் வழிமுறைகளை அறிமுகப்படுத்தல்; மற்றும் வர்த்தக பேச்சு வார்த்தைகளை நிறைவுசெய்தல் போன்றவற்றுக்கான அமைப்பியல் சார்ந்த சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் இதற்கு ஆதரவளித்தல்வேண்டும்.

நிலையான வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் அரசியல் உறுதிப்பாடு அத்தியாவசியமானதாகும்.

Published Date: 

Wednesday, May 2, 2018