Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

10ஆவது ஆசிய பணச் சுழற்சிக் கருத்தரங்கு - 2019, கொழும்பு இலங்கை

இலங்கை மத்திய வங்கி இணைந்து நடாத்திய நாணய ஆராய்ச்சியுடன் இணைந்த 10ஆவது ஆசிய பணச் சுழற்சிக் கருத்தரங்கு - 2019 கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் 2019 செத்தெம்பர் 23 - 26 வரை இடம்பெற்றது. பன்னாட்டு வர்த்தக ரீதியான பணத் தொழிற்பாடுகள் கருத்தரங்கு என முறைசார்ந்து அறியப்படுகின்ற பணச் சுழற்சிக் கருத்தரங்கானது வர்த்தக ரீதியான காசு முகாமைத்துவம், விநியோகம் மற்றும் சுற்றோட்டம் என்பனவற்றின் ஆர்வலர்களுக்கான முதன்மை வாய்ந்த உலக நிகழ்வொன்றாகும். 24 வருட அதன் வரலாற்றைக் கொண்ட இக்கருத்தரங்கினை நடாத்திய முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை விளங்குகின்றது. 

தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் – பன்னாட்டுத் தீர்ப்பனவிற்கான வங்கி உயர்மட்ட ஆய்வரங்கு மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிறைவேற்றுக் குழுவின் 18ஆவது கூட்டம்

இலங்கை மத்திய வங்கி, 2019 செத்தெம்பர் 26 இலிருந்து 28 வரை கொழும்பில் தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் - பன்னாட்டுத் தீர்ப்பனவிற்கான வங்கி உயர்மட்ட ஆய்வரங்கினையும் தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் நிறைவேற்றுக் குழுவின் 18ஆவது கூட்டத்தினையும் நடாத்தியது. இந்நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர், பதில் ஆளுநர்கள் மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் உறுப்பினர்களாகவுள்ள மத்திய வங்கிகள் மற்றும் நாணய மேலாண்மைச் சபைகளின் பேராளர்கள் மற்றும் தனிச் சிறப்புமிக்க பேச்சாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையிலுள்ள வங்கிகள் தொடர்பில் மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ் இனால் தெரிவிக்கப்பட்ட துறைக் கருத்துக்கள் மீதான மத்திய வங்கியின் நோக்கு

2019 செத்தெம்பர் 27ஆம் நாளன்று மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ் “இலங்கையின் கடன்வழங்கல் வீதக் குறைப்பானது வங்கிகளுக்கான கொடுகடன் எதிர்மறையாகும்” என்ற தலைப்பில் இலங்கையிலுள்ள வங்கிகள் மீதான துறைக் கருத்து ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பில், இலங்கை மத்திய வங்கி, மூடியின் முடிவுரையானது முழுத் தகவலையும் கருத்திற் கொண்டிருக்கவில்லை என்பதனால் எவ்வித அடிப்படையுமற்றது என்று கருதுகிறது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 யூலை

இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியிலும் பார்க்க கூடுதலாக ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக 2019 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. பல மாதங்களாகக் காணப்பட்ட உறுதியான வளர்ச்சியின் பின்னர் 2019 யூலையில் ஏற்றுமதி வருவாய்கள் 7.0 சதவீதம் கொண்ட (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியைப் பதிவுசெய்ததுடன் இறக்குமதிச் செலவினம் 2.2 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியடைந்தது. 

2019 யூலையில் ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு நீர்க்கல எரிபொருளின் குறைந்த விலைகள் காரணமாக பெற்றோலிய உற்பத்திகளிலிருந்தான வருவாய் குறைவடைந்தமையும் முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் உயர்ந்த ஏற்றுமதித் தளத்தினைத் தோற்றுவித்த 2018 யூலையில் இடம்பெற்ற கப்பற் கலமொன்றின் ஏற்றுமதியும் காரணங்களாக அமைந்தன. 

2019 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறை 2019 யூனில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 316 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 717 மில்லியனுக்கு விரிவடைந்தது.

உரிமம் பெற்ற வங்கிகளின் இலங்கை ரூபா வைப்புக்களுக்கான உயர்ந்தபட்ச வட்டி வீதங்கள் தொடர்பான நாணய விதிச் சட்டக் கட்டளையை மீளப்பெறல்

இலங்கை ரூபாவிற்கான சந்தைக் கொடுகடன் வீதங்கள் தொடர்பான அண்மைய கொள்கைத் தீர்மானங்களை ஊடுகடத்துவதன் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட பணிப்புரைகளின் தொடர்ச்சியாக, இலங்கை ரூபா வைப்புக்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்து 26 ஏப்பிறல் 2019இல் வெளியிடப்பட்ட 2019ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாணய விதிச் சட்டக் கட்டளை 24 செத்தெம்பர் 2019இல் அமுலுக்குவரும் வகையில் நாணயச் சபையால் மீளப்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி – 2018

2018ஆம் ஆண்டிற்காக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்ட மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கமைய  மேல் மாகாணம் தொடர்ந்தும் பாரிய பங்கிற்கு வகைகூறியது. முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகூடிய பங்களிப்பாளர்களாக மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள் காணப்பட்டன.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் மாகாண ரீதியான மொ.உ.உற்பத்திப் பங்கில் அதிகூடிய அதிகரிப்பு மேல் மாகாணத்தில் பதிவாகியிருந்தது. அதிகரிப்பினைப் பதிவுசெய்த ஒரேயொரு வேறு மாகாணம் வட மத்திய மாகாணம் ஆகும். மத்தியஇ சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பங்குகள் 2018இல் குறைவடைந்த அதேவேளை வடமேல்இ தென்இ கிழக்கு மற்றும் வட மாகாணங்களின் பங்குகள் மாற்றமின்றிக் காணப்பட்டன.

Pages

சந்தை அறிவிப்புகள்