இலங்கை மத்திய வங்கி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட்டுடன் இணைந்து தேசிய அட்டைத் திட்டத்தினை ஆரம்பித்ததன் மூலம் நாட்டின் கொடுப்பனவுத் தோற்றப்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல் கல்லொன்றினை அடைந்திருக்கிறது. தேசிய அட்டைத் திட்டமானது, பன்னாட்டு கொடுப்பனவு அட்டைத் தொழிற்பாட்டாளரான ஜேசிபி யப்பான் இன்ரநஷனலின் பங்கேற்புடன் லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் தொழிற்படுத்தப்படும். ஆரம்பத்தில், இவ்வட்டைத் திட்டத்தின் கீழ் பற்று அட்டை வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக, காசு மீள பெறுகைகளுக்கு வசதியளிப்பதற்காக, லங்காபே வலையமைப்புடன் நாடளாவிய ரீதியில் இணைக்கப்பட்டுள்ள 4,800 இற்கு மேற்பட்ட தன்னியக்கக்கூற்றுப் பொறிகளில் தேசிய அட்டைத் திட்ட அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.