Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2017ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க இலங்கை நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது அறுபத்து எட்டாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களால் மாண்புமிகு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆண்டறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டவாறான 2017இல் இலங்கையின் பொருளாதாரத்தின் செயலாற்றம் பற்றிய சாராம்சம் கீழே தரப்படுகிறது:

திறைசேரி முறி தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் தொடர்பான தெளிவுபடுத்தல்

திறைசேரி முறிகளை முதிர்ச்சித் திகதிக்கு முன்னர் அவற்றிற்கான கொடுப்பனவுகளை செலுத்த போதுமான நிதியில்லை என்பதனைக் காட்டும் தவறான ஊடக அறிக்கையினை இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கின்றது.

இலங்கை மத்திய வங்கி மேற்குறிப்பிட்ட ஊடக அறிக்கைகளில் துல்லியமான தன்மையில்லை என்பதனை அவதானித்திருப்பதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு படுகடனைத் தீர்ப்பனவு செய்வதில் அரசாங்கம் அப்பளுக்கற்ற படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுப் பதிவேடுகளைக் கொண்டிருப்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. முதிர்ச்சியில் வட்டியையும் முதல் தொகையினையும் தவணைத் திகதிக்கு முன்னர் கொடுப்பனவு செய்யாது, தவணைத் திகதியில் (சரியான நேர கொடுப்பனவு) கொடுப்பனவு செய்வது, அரசாங்கத்தின் சார்பில் பொதுப்படுகடனை முகாமைப்படுத்துகின்ற அதன் முகவர் தொழிற்பாடுகளை ஆற்றும் போது இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படுகின்ற விதியாகும்.

2018 மாச்சில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் 2017 நவெம்பரிலிருந்து தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினைத் தொடர்ந்தது. எனவே ஆண்டுக்கு ஆண்டு தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் முதன்மைப் பணவீக்கம் 2018 மாச்சில் 2018 பெப்புருவரியின் 3.2 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன் இது 2016 ஏப்பிறலிற்குப் பின்னர் ஏற்பட்ட மிகக்குறைந்த அளவுமாகும். 2018 மாச்சில் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சிக்கு சாதகமான வழங்கல் நிலைமைகள் காரணமாக அமைந்து 2018 மாச்சில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் வீழ்ச்சியடைய உதவியது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 பெப்புருவரியின் 7.2 சதவீதத்திலிருந்து 2018 மாச்சில் 6.7 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.

பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் நான்காவது மீளாய்வு தொடர்பில் அலுவலர்-மட்டத்திலான உடன்படிக்கையை அடைந்துள்ளது

கொழும்பிலுள்ள அதிகாரிகளுடனும் வாசிங்டன் டீசியில் வசந்தகால குழுமங்களின்போதிலும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் தூதுக்குழுவிற்கான தலைவர் பின்வருமாறான அறிக்கையை வெளியிட்டார்:

இலங்கை கொள்வனவு முகாமையாளா் சுட்டெண் - 2018 மாச்சு

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2018 பெப்புருவரி 55.6 சுட்டெண் புள்ளிகளிலிருந்து மாச்சு மாதத்தில் 65.6 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்து 12 மாதத்திற்க்கான ஒரு உயர்வை அடைந்திருந்ததுடன் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஒரு உறுதியான முன்னேற்ற திருப்பத்தினை சமிஞ்சைப்படுத்தியதுடன் முன்னைய வருடங்களில் அவதானிக்கப்பட்ட போக்கிற்கு ஏற்ற விதத்திலும் காணப்பட்டது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில்  ஏற்பட்ட அதிகரிப்பிற்கு  புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச்சுட்டெண்களினால் பிரதிபலிக்கப்பட்டவாறு பருவகால கேள்விகளினூடாக அதிகரித்த கட்டளைகளே பெரிதளவில் பங்களித்திருந்தது. கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் மாதகாலப்பகுதியில் அதிகரித்திருந்தது. மேலும், நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண்ணும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சாதகமாக பங்களித்திருந்தது. எவ்வாறாகினும், அதிகளவிலான பதிலிறுப்பாளர்கள் திறன்சார் மற்றும் திறன்சார்பற்ற தொழிலாளர்கள் இரண்டிலுமான ஆட்சேர்ப்பில் காணப்படுகின்ற இடையூறுகளை, விசேடமாக புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இலங்கையில் மெய்நிகர் நாணயங்கள் தொடர்பில் பொதுமக்களை விழிப்பூட்டல்

இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மெய்நிகர் நாணயங்களுக்கு வளர்ந்துவரும் ஆர்வம் பற்றி விழிப்பாக இருக்கின்றது.

'மெய்நிகர் நாணயங்கள்" என்ற சொற்பதமானது தனிப்பட்டரீதியாக விருத்திசெய்பவர்களினால் வெளியிடப்படுகின்ற அவர்களின் சொந்தக் கணக்கின் அலகுகளில் மாற்றம் செய்யப்படுகின்ற டிஜிடல் ரீதியாக உருவாக்கப்பட்ட பெறுமதி வகைக் குறிப்பீடுகளை குறிப்பிடுவதற்குப் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது. மெய்நிகர் நாணயங்களின் பொதுவான உதாரணங்கள், எண்ம நாணயம் (Bitcoin), மென் நாணயம் (Litecoin) மற்றும் ஈத்தரம் (Ethereum) போன்ற மறைகுறி நாணயங்களாகும் (Crytocurrenceis). மெய்நிகர் நாணயங்கள் மத்திய வாங்கியினால் வெளியிடப்படும் நாணயங்களல்ல.

Pages