இலங்கை மத்திய வங்கி அதன் 12ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்தியது

இலங்கை மத்திய வங்கி அதன் மாபெரும் வருடாந்த நிகழ்வான 12ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2019 திசெம்பர் 09ஆம் திகதி நடத்தியது. மாநாடானது சமகால பேரண்டப் பொருளாதாரக் கொள்கை தொடர்பான கோட்பாட்டு ரீதியான மற்றும் அனுபவ ரீதியான ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதனையும் பல்லினத் தன்மை கொண்ட பின்புலத்திலிருந்து வருகை தருகின்ற ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது பார்வை, கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் அனுபவங்களைப் பல்வேறுபட்ட கோணங்களிலிருந்து ஆராய்வதற்கான தளமொன்றினை வழங்குவதனையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. 

ஆரம்ப உரையினை ஆற்றும் பொழுது, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி உலகம் முழுவதிலுமுள்ள மத்திய வங்கிகளினாலும் கொள்கை வகுப்போரினாலும் எதிர்நோக்கப்பட்ட பல்வேறு உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்கள் பற்றியும் பாரிய பேரண்டப் பொருளாதாரத்தினையும் நிதியியல் உறுதிப்பாட்டினையும் உறுதிப்படுத்துவதற்கு இவ்வபிவிருத்திகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தினையும் தெளிவாகக் குறிப்பிட்டார். அவர், இலங்கையினால் எதிர்நோக்கப்படும் பேரண்டப் பொருளாதார சவால்கள் பற்றி எடுத்துக்காட்டியதுடன் சரியான நேரத்தில் தூண்டுதலளிக்கும் பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் கொள்கை வகுப்போருக்கு உதவும் விதத்தில் ஆராய்ச்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்;ள வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

இவ்வாண்டின் மாநாடானது, இரண்டு புகழ்பூத்த பன்னாட்டு பொருளியலாளர்களான கெய்யோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிறுவகத்தின் இடைவருகை புலமையாளரும், யப்பானிய வங்கியின் கொள்கைச் சபையின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் சாயுறி ~ராய் மற்றும் கௌரவ பணிப்பாளர் நாயகமும் பாங்கியு டி பிரான்சின் முதன்மைப் பொருளியலாளருமான திரு. மார்க்-ஒலிவர் ஸ்ரோஸ்-கான் ஆகியோரின் வருகையினால் பெருமை பெற்றது. “அண்மைக்கால நாணயக் கொள்கை பிரச்சனைகளும் சவால்களும்” என்ற தலைப்பில் சபையினருக்கு உரையாற்றுகையில் பேராசிரியர் சாயுறி ~ராய் தோற்றம்பெற்று வரும் பொருளாதாரங்களில் பன்னாட்டு நிதிப் பிரச்சனைகள், தாழ்ந்த பணவீக்கம் மற்றும் முன்னேற்றம் கண்ட பொருளாதாரங்களில் புதிய நாணயக் கொள்கைக் கட்டமைப்பு என்பனவற்றுடன் தொடர்பான பிரச்சனைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டார். திரு. மார்க்-ஒலிவர் ஸ்ரோஸ்-கான் “மத்திய வங்கித்தொழில்: ஆராய்ச்சியிலிருந்து பொருளாதாரம்Æ நிதியியல் அறிவிற்கு” என்ற தலைப்பில் உரையாற்றும் பொழுது ஆராய்ச்சி மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதியியல் அறிவினை மேம்படுத்துவதில் மத்திய வங்கிகளின் வகிபாகம் பற்றி விளக்கியதுடன் பாங்கியு டி பிரான்சின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு தொழில்நுட்ப அமர்வுகள் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர்களான திரு. கே. எம். எம். சிறிவர்த்தன மற்றும் திருமதி. ரி. எம். ஜே. வை. பி பர்னாந்து ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றன. மிகக் கடுமையான இரண்டடுக்கு மீளாய்வுச் செய்முறைகளினூடாகத் தெரிவுசெய்யப்பட்ட நாணயக் கொள்கை, அரச முதலீடு, உற்பத்தியாக்கம் மற்றும் வரிவிதிப்பு போன்ற சமகால விடயங்கள் மீதான ஏழு ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியாவிலிருந்தான ஆராய்ச்சியாளர்களினாலும் இலங்கை மத்திய வங்கியிலிருந்தான ஆராய்ச்சியாளர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான முனைவர் டி. எஸ். விஜேசிங்க ஞாபகார்த்த விருது இலங்கை மத்திய வங்கியினைச் சேர்ந்த திரு. மாயாண்டி கேசவராஜாவிற்கு “நாணயக் கொள்கை மற்றும் பணவீக்கம் - அபிவிருத்தி பொருளாதாரங்களிலுள்ள வெளியீட்டு வேறுபாடு: இலங்கையிலிருந்தான பாடங்கள்” என்ற மகுடத்தின் கீழான ஆராய்ச்சிக் கட்டுரைக்கு வழங்கப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, December 12, 2019