வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - செத்தெம்பர் 2019

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சி இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விஞ்சிக் காணப்பட்டமையின் காரணமாக 2019 செத்தெம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) விரிவடைந்தது. இருப்பினும் கூட, ஏற்றுமதிகளிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய்கள் அதிகரித்து இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினம் கடுமையாக வீழ்ச்சியடைந்தமையின் விளைவாக 2019இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை, முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியினை விட குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவாகவே காணப்பட்டது. அதேவேளை, சுற்றுலா வருகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி 2019 செத்தெம்பரில் மேலும் கட்டுப்படுத்தப்பட்டது. 2019 செத்தெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் (ஆண்டிற்கு ஆண்டு) உயர்வடைந்த போதும் ஒன்றுசேர்ந்த அடிப்படையில் அது வீழ்ச்சியடைந்தது. நிதியியல் கணக்கில், 2019 செத்தெம்பரில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையிலும் அரச பிணையங்கள் சந்தையிலும் வெளிநாட்டு முதலீடு தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தது. செத்தெம்பர் மாத காலப்பகுதியில் சில பெறுமானத் தேய்வு அழுத்தங்கள் காணப்பட்ட போதும் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபா தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Friday, November 15, 2019